கடந்த வாரத்தில் 554 பேருக்கு டெங்கி பாதிப்பு

கடந்த வாரம் ஜன­வரி 3 - 9ஆம் தேதி வரை டெங்­கி­யால் பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் எண்­ணிக்கை புதிய உச்­ச­மான 554ஐ தொட்­டுள்­ளது. இதனை தேசிய சுற்­றுப்­புற வாரி­யம் தனது இணை­யப் பக்கத்தில் வெளி­யிட்­டுள்­ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 27 முதல் ஜன­வரி 2ஆம் தேதி வரை ஆக அதி­க­மாக 448 பேர் பாதிக்­கப்­பட்­ட­னர். இந்த ஆண்டு ஜன­வரி 10ஆம் தேதி 50 பேர் பாதிக்­கப்­பட்­ட­னர். அதற்கு மறுநாளான திங்கட்­ கி­ழமை பிற்­ப­கல் 3.30 மணிக்கு 71 பேர் பாதிக்­கப்­பட்­டி­ருந்த­தா­க­வும் வாரி­யம் தெரி­வித்­தது.

ஏடிஸ் கொசுக்­களி­டம் இருந்து பாது­காப்­பாக இருப்­ப­தற்கு உட­ன­டி­யாக நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு பொது­மக்­களை வாரி­யம் கேட்­டுக்­ கொண்­டுள்­ளது. "ஏடி­ஸ் கொசுக்­களின் உற்­பத்தி அதி­க­ரித்­துக்­ கொண்­டுள் ­ளது. தட்­ப­வெப்ப நிலை­யும் எப்­போ­தும் போல் அல்­லா­மல் சற்று வெப்­ப­மா­கவே உள்­ளது. "இந்த வெப்ப நிலை ஏடி­ஸ் கொசுக்­களின் இனப்­ பெ­ருக்­கத்­திற்கு ஏது­வாக அமைந்­துள்­ளது," என்றது வாரியம். பொது­மக்­கள், தங்கள் வீடு­களில் ஏடிஸ் கொசுக்­கள் அண்டா­மல் இருப்­பதை உறுதி செய்­து­கொள்­ளு­மாறு வாரி­யம் கேட்­டுக் கொண்­டுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!