நிதி அமைச்சர்: விவேகமான வரவுசெலவுத் திட்டம்

நிதி அமைச்­சர் ஹெங் சுவீ கியட் மார்ச் 24ஆம் தேதி ஆண்டு வர­வு­செ­லவு திட்­டத்தை நாடா­ளு­மன்றத்­தில் தாக்கல் செய்கிறார். பொரு­ளி­ய­லில் தீவிர கவனம் செலுத்­தும், 'விவேக வர­வு­செ­ல­வுத் திட்­ட­மாக' இது இருக்­கும் என அமைச்­சர் கூறியுள்­ளார். இந்த ஆண்டின் வர­வு­செ­ல­வுத் திட்டம் புதிய அர­சாங்கத்­தின் முதல் வர­வு­செ­ல­வுத் திட்டம் என்­ப­தால், கடந்த அர­சாங்கத்­தின் ­போது கிடைத்த லாபம் சேமிப்­பில் சேர்க்­கப்­படும். எனவே, நிதித்­துறை­யில் விவே­க­மாக நடக்க வேண்டும் என்ற அமைச்­ச­ரின் கருத்து ஆச்­ச­ரி­ய­ம­ளிக்­க வில்லை என ஆய்­வா­ளர்­கள் தெரி­வித்­த­னர். இதற்­கிடையே, மூப்பு தொடர்­பான நோய்­க­ளால் அவ­தி­யு­றும் மூத்த குடி­மக்­களுக்­கும் அவர்­களைப் பரா­ம­ரிக்­கும் அவர்­க­ளது குடும்பத்­தி­ன­ருக்­கும் அதிகம் செய்ய வேண்டும் என்பது மக்கள் செயல் கட்­சி­யின் முதியோர் குழுவில் கோரிக்கை.

எல்­டர்­‌ஷீல்டை மேம்படுத்­து­வது, கடும் குறை­பாடுள்­ளோருக்கு தேசிய காப்­பு­று­தி போன்றவை குழு முன்வைத்­துள்ள பரிந்­துரைகளில் சில. எல்டர்‌ஷீல்டை கட்டா யமாக்குவதும் அதில் ஒன்று. 2002ல் அத்திட்டம் அறிமுகமான போது, அவ்வாண்டில் 70 வயதும் அதற்கு மேல் இருந்தவர்களும் அதில் சேர்த்துக்கொள்ளபட வில்லை. இந்த வயது வரம்பை நீக்க வேண்டும் என்கிறது குழு. வர­வு­செ­லவு திட்­டத்­திற்­கான தனது கருத்­து­களை நிதி அமைச்­சி­ட­மும் சுகாதார அமைச்­சி­ட­மும் மசெ­க­வின் முதியோர் குழுத் தலை­வ­ரும் நாடா­ளு­மன்ற நாய­க­ரு­மான ஹலிமா யாக்கோப் அளித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!