புதிய நிறம், நவீன வடிவமைப்பு: வசதிகள் நிறைந்த பேருந்து

சிங்கப்­பூ­ரின் சாலைகள் இனிமேல் மேலும் பசுமை­யு­டன் காட்சி அளிக்­கும். விரைவில் பொதுப் போக்­கு­வ­ரத்­துப் பேருந்­து­கள் எல்லாம் பச்சை நிறத்­துக்கு மாற­வுள்­ளன. பேருந்­து­களின் புதிய நிறத்தை போக்­கு­வ­ரத்­துக்­கான மூத்த துணை அமைச்­சர் இங் சீ மெங் நேற்று நீ ஆன் சிட்டி சிவிக் பிளா­சா­வில் நடந்த பேருந்து கண்­காட்­சி­யில் வெளி­யிட்­டார். பேருந்து நிறம் குறித்து நிலப் போக்­கு­வ­ரத்து ஆணையம் நடத்­திய ஒரு மாத கால ஆய்வில் 144 அதிக வாக்­கு­களில் பச்சை நிறம் தேர்வு பெற்­றுள்­ளது. பிப்­ர­வரி 5ஆம் தேதி நிறை­வுற்ற வாக்­கெ­டுப்­பில், பேருந்துகளை தற்­போ­துள்ள சிவப்பு நிறத்­துக்கு பதிலாக பச்சை நிறத்­துக்கு மாற்ற கிட்டத்தட்ட 29,000 பேர் ஆத­ர­வ­ளித்­துள்­ள­னர். மொத்தம் 57,505 செல்­லு ப­டி­யா­கும் வாக்­கு­கள் பதி­வா­யின.

ஆண்டின் மத்­தி­யில் பச்சை நிறப் பேருந்­து­கள் சாலை­களில் சேவையாற்றத் தொடங்­கும். டவர் டிரான்­சிஸ்ட் பேருந்­து­கள் முதல் பச்சை நிறப் பேருந்­து­க­ளா­கத் திகழும். புதிய வடி­வமைப்பைக் கொண்ட இரு ஈர­டுக்கு பேருந்­து­களும் நேற்றைய கண்­காட்­சி­யில் அறி­முகப்­ படுத்­தப்­பட்­டன. இரண்­டும் மூன்று கத­வு­கள், இரண்டு பக்க மாடிப்­ப­டி­கள், வசதியான இருக்கைகளைக் கொண்ட பேருந்துகள். மேலும் கைத்­தொலை­பே­சி­களுக்கு மின்­னேற்­றும் வசதி போன்ற புதிய உள்­வ­டி­வமைப்­பு­கள் 2018ஆம் ஆண்டுவாக்கில் செயல்­பாட்­டுக்கு வரும் என்று நிலப் போக்­கு­வ­ரத்து ஆணையம் தெரி­வித்­தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!