ஜப்பானில் ஐந்தாம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது

தோக்கியோ: ஜப்பானில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட நிலநடுக்கமும் அதனைத் தொடர்ந்து எழுந்த ராட்சத அலையும் ஏற்படுத்திய பேரழிவுகள் இன்னமும் ஜப்பானிய மக்களின் மனதில் நிலைத்திருக்கவே செய் கின்றன. ஐந்து ஆண்டு காலம் ஆகிவிட்ட போதிலும் அந்தப் பேரிடரின் பாதிப்புகளிலிருந்து மக்கள் இன்னமும் மீளமுடியாத நிலையில் நேற்று அங்கு பல இடங்களில் நினைவு நிகழ்ச்சிகள் நடை பெற்றன. தோக்கியோவில் நடந்த நினைவஞ்சலி நிகழ்ச்சியில் ஜப்பானியப் பிரதமர் ‌ஷின்சோ அபே, ஜப்பானியப் பேரரசர் அகிகிட்டோ உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

ஃபுகு‌ஷிமா பகுதியிலும் நினை வஞ்சலி நிகழ்ச்சிகள் நடந்தன. நாடெங்கிலும் நேற்று நடந்த நினைவஞ்சலி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மக்கள் பேரிடரில் இறந்தவர்களை நினைத்து ஒரு நிமிடம் மெளன அஞ்சலி செலுத் தினர். அந்தப் பேரிடர் ஏற்படுத்திய பாதிப்புகள் கணக்கிடமுடியாது. அந்தப் பேரிடரின்போது வெளியேறிய 470,000 பேரில் இன்னமும் பலர் தற்காலிக முகாம் களிலேயே தங்கியுள்ளனர்.

2011ஆம் ஆண்டு மார்ச் 11ஆம் தேதி ஜப்பானின் வடகிழக்கு கடலோரப் பகுதிகளை 9.0 ரிக்டர் அளவிலான பயங்கர நிலநடுக்க மும் சுனாமி அலையும் தாக்கியதில் சுமார் 18,500 பேர் உயிரிழந்தனர்; அல்லது அவர்களைக் காண வில்லை. சுனாமி அலையில் பல பள்ளிக்கூட கட்டடங்களும் வீடுகளும் மூழ்கிப்போயின. அந்தப் பேரிடரின்போது ஃபுகு‌ஷிமா அணுமின் நிலையம் முற்றிலும் சேதம் அடைந்தது. அந்த அணுமின் நிலையத்தில் கதிரியக்க கசிவு ஏற்பட்டது. அதிலிருந்து மக்களைக் காப்பாற்றும் நோக்கில் அதனைச் சுற்றியிருந்த கிராமங்களிலிருந்து 160,000 பேர் வெளியேற்றப் பட்டனர்.

அவர்களில் இன்னமும் ஒரு லட்சம் பேர் தங்கள் வீடுகளுக்கு திரும்பமுடியாத நிலையில் உள்ளனர். அந்தப் பேரிடருக்குப் பிறகு ஜப்பானில் உள்ள அனைத்து அணுமின் நிலையங்களும் மூடப் பட்டன. அதன் பிறகு ஒரு சில அணுமின் நிலையங்கள் மட்டும் மீண்டும் செயல்படத் தொடங்கின. பேரிடரால் பெரிதும் பாதிக்கப் பட்ட பகுதிகளில் கட்டுமானப் பணிகளையும் மறு சீரமைப்புப் பணிகளையும் மேற்கொள்ள அரசாங்கம் பில்லியன் டாலர் செலவு செய்துள்ள போதிலும் இன்னும் அந்தப் பணிகள் முடிவடையவில்லை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!