பள்ளிவாசல் கட்டுமான நிதி பங்களிப்பு உயர்கிறது

பள்ளிவாசல் கட்டுமானம், மெண் டாக்கி நிதிக்கு (எம்பிஎம்எஃப்) முஸ்லிம்கள் அளித்து வரும் மாதாந்திர பங்களிப்பு ஜூன் 1ஆம் தேதி முதல் கூடுகிறது. சிங்கப்பூர் இஸ்லாமிய மையத் தில் நேற்று நடந்த சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்ற (முயிஸ்) பணித்திட்டக் கருத்தரங்கின் போது இந்த மாற்றங்களை அறிவித்தார் முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் டாக்டர் யாக்கூப் இப்ராஹிம். கடந்த 2009ஆம் ஆண்டிற்குப்பின் நிதிப் பங்களிப்பில் மாற்றம் செய்யப்படுவது இதுவே முதல் முறை.

வருமானத்திற்கேற்ப நிதிப் பங்களிப்பும் இருக்கும் வகையில் மாற்றங்கள் செய்யப்படுகின்றன. மாத வருமானமாக $4,000 முதல் $10,000 வரை ஈட்டுவோருக்காக நான்கு கூடுதல் பிரிவுகள் அறி முகப்படுத்தப்படுகின்றன. மாதத்திற்கு $4,000 முதல் $6,000 வரை வருமானம் ஈட்டு வோர் இவ்வாண்டு ஜூன் 1 முதல் எம்பிஎம்எஃப் நிதியாக $3.50 கூடுதலாக, அதாவது $19.50 செலுத்தவேண்டும். $10,000க்கும் அதிகமாக வருமானம் ஈட்டுவோர் தங்களது மாதாந்திர சந்தாவாக $26 செலுத்துவர். இப்போது இருப்பதைவிட இது $10 அதிகம். ஆயிரம் வெள்ளிக்கும் குறை வாக மாத வருமானம் ஈட்டுவோரின் சந்தா கட்டணம் ஒரு வெள்ளி கூடுகிறது. அவர்கள் இனி $3 செலுத்துவர். இப்போது $3.50 ஆக இருக்கும் $1,000 முதல் $2,000 வரை வருமானம் ஈட்டு வோருக்கான மாதாந்திர சந்தா $4.50 ஆக உயர்கிறது.

இந்தப் புதிய மாற்றங்களின் மூலம் வருடாந்திர நிதிப் பங்களிப்பு $6 மி. கூடி, $26.2 ஆக உயரும். 1975ஆம் ஆண்டில் அறிமுக மான இந்த எம்பிஎம்எஃப் நிதி, சிங்கப்பூரில் பள்ளிவாசல்கள் கட்டவும் ஏற்கெனவே உள்ள பள்ளிவாசல்களைப் புனரமைக் கவும் நிதியுதவி வழங்குகிறது. அத்துடன், முஸ்லிம்களின் கல்வி, சமூகத் திட்டங்களுக்கும் ஆதரவு அளிக்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!