அமரர் சே.வெ.சண்­மு­கம் எழுதிய ஐந்து மேடை நாட­கங்களின் தொகுப்பு நூல் வெளியீடு

சிங்கப்­பூ­ரின் தமிழ் மேடை நாடக வர­லாற்றைப் பதிவு செய்யும் வகையில் மறைந்த முன்னோடி எழுத்­தா­ளர் திரு சே.வெ.சண்­மு­கம் எழுதிய ஐந்து மேடை நாட­கங்களின் தொகுப்பு இம்­மா­தம் 6ம் தேதி வெளி­யி­டப்­பட்­டது. 'எழுத்­துச்­சிற்பி சே.வெ.சண்­மு­கத்­தின் மேடை நாட­கங்கள்' என்ற தலைப்­பி­லான நூலை திரு சே.வெ.சண்­மு­கத்­தின் துணை­வி­யார் வெளி­யிட்­டார்.

சிங்கப்­பூர் இந்­தி­யக் கலைஞர் சங்கம் நிகழ்ச்­சிக்கு ஏற்பாடு செய்­தி­ருந்தது. நூலில் இடம்­பெ­றும் ஐந்து நாட­கங்களில், 1972ஆம் ஆண்டு விக்­டோ­ரியா அரங்­கில் மேடை­யேற்­றப்­பட்டு பெரும் வர­வேற்பைப் பெற்ற 'கல்­யா­ண­மாம் கல்­யா­ணம்' நாட­க­மும் ஒன்று.

இந்­நா­ட­கத்தைக் காண தமிழ் முரசு நிறு­வ­னர் திரு கோ.சாரங்க­பாணி வந்­தி­ருந்த­தா­க­வும் நாட­கத்தைப் பார்த்து அவர் வாய்­விட்­டுச் சிரித்­த­தா­க­வும் நூல் வெளி­யீட்டு நிகழ்ச்­சி­யில் நூலாக்க உரை­யாற்­றிய கலைஞர் சங்க மதி­யுரை­ஞர் திரு ச.வரதன் கூறினார். திரு சண்­மு­கம் எழுதிய மேடை நாட­கங்களில் பல­வற்றை இயக்­கிய திரு வரதன், தனது நண்­ப­ரின் நினைவாக நாடகத் தொகுப்பை வெளி­யி­டப் பெரும் முயற்சி எடுத்­த­தா­க­வும் கூறினார்.

கருத்­துரை ஆற்றிய தேசிய நூலக வாரிய அதிகாரி திரு­ம­தி புஷ்­ப­லதா, தற்­கா­லத்­தில் நவீனத் தொழில்­ நுட்­பத்­தின் துணை­யு­டன் கையா­ளப்­படும் "in­t­e­r­a­c­ti­ve" (இரு­வ­ழித்­ தொ­டர்பு) உத்தி அக்காலத்­தி­லேயே புதுமை­யான முறையில் கையா­ளப்­பட்­ட­தற்கு 'அதுதான் ரக­சி­யம்' நாட­கத்தை உதா­ர­ண­மா­கக் கூறினார். இந்­நா­ட­கத்­தின் கடைசிக் காட்சி முன்­கூட்­டியே எழு­தப்­ப­ட­வில்லை. நடி­கர்­களுக்­குக் ­கூட நாட­கத்­தின் முடிவு தெரியாது.

எழுத்­தா­ளர் அமரர் திரு சே.வெ.சண்­மு­கம் எழுதிய ஐந்து மேடை நாட­கங்களின் தொகுப்பு இந்த மா­தம் 6ஆம் தேதி வெளி­யி­டப்­பட்­ட நிகழ்ச்சியில் சுமார் 80 பேர் கலந்து கொண்டனர். திரு சே.வெ.சண்­மு­கத்­தின் துணை­வி­யார் (இடது) வெளி­யிட்­டார். திரு சண்­மு­கம் எழுதிய மேடை நாட­கங்களில் பல­வற்றை இயக்­கிய திரு வரதன் (வலது) தனது நண்­ப­ரின் நினைவாக நாடகத் தொகுப்பை முயற்சி எடுத்­து வெளி­யிட்டதாகக் கூறினார். படம்: ச திருநாவுக்கரசு

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!