நியூகாசலைக் காப்பாற்ற களமிறங்கும் பெனிடெஸ்

நியூகாசல்: இரண்டாம் நிலை லீக்குக்குத் தள்ளப்படும் அபாயத் தை எதிர்நோக்கும் நியூகாசல் யுனைடெட் காற்பந்துக் குழுவைக் காப்பாற்ற பிரபல நிர்வாகி ரஃபா பெனிடெஸ் (படம்) நியமிக்கப் பட்டுள்ளார். கடந்த ஒன்பது மாதங்களாக நியூகாசலின் நிர்வாகியாக இருந்து வந்த ஸ்டீவ் மெக்லேரன் நேற்று முன்தினம் பதவி நீக்கம் செய்யப் பட்டார். வெறும் பத்து ஆட்டங்கள் எஞ்சியிருக்கும் நிலையில் லீக் பட்டியலின் 19வது இடத்தில் நியூகாசல் உள்ளது.

ஏழு ஆண்டுகளில் இரண் டாவது முறையாக இரண்டாம் நிலை லீக்குக்குத் தள்ளப்படு வதைத் தவிர்க்க நியூகாசல் போராடி வருகிறது. இதற்கிடையே, இந்த அபாயகர மான நிலையிலிருந்து நியூகாச லைக் காப்பாற்ற பெனிடெஸ் சிறந்த தேர்வு என்று அக்குழுவின் முன்னாள் நட்சத்திரம் மிக்கி குவின் தெரிவித்துள்ளார். பெனிடெஸ் தலைமையின் கீழ் அடுத்த பருவத்திலும் பிரிமியர் லீக்கில் விளையாடும் வாய்ப்பை நியூகாசல் தக்கவைத்துக் கொள்ளக்கூடும் என்று பெனி டெசின் கீழ் முன்பு விளையாடிய லிவர்பூல் அணியின் முன்னாள் வீரர் டேனி மர்ஃபி தெரிவித்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!