தேசிய மரபை எல்லாத்தரப்பினரும் அறிந்துகொள்ள $750,000 முயற்சி

வசதி குறைந்த­வர்­கள், சிறப்­புத் தேவை­யுள்­ள­வர்­கள், உடற்­குறை­யுள்­ளோர், மூத்த குடி­மக்­கள், பிரச்­சினை­யில் சிக்­கக்­கூ­டிய இளை­யர்­கள் என சமூ­கத்­தின் அனைத்­துத் தரப்­பி­ன­ரும் சிங்கப்­பூ­ரின் மரபை அறிந்துகொள்ள புதிய முயற்சி ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. அதற்காக தேசிய மரபுடைமைக் கழகம் 'மர­புடைமை வழி பரிவு' எனும் திட்டத்தை நேற்று அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின் கீழ், அத்தகையோர் மர­புடைமை நிலை­யங் களுக்கும் பகு­தி­களுக்­கும் சென்று அவற்றை அறிந்­து­கொள்ளும் வகையில் தொடர் போதனைத் திட்­டங்கள் இடம்பெறவுள்ளன.

இதில் வர­லாற்று முக்­கி­யத்­து­வம் மிக்க இடங்களுக்கு இலவச சுற்­றுலாக்­கள், அரும்­பொ­ரு­ள­கங்களில் பயி­ல­ரங்­கு­கள், கலந்­துரை ­யா­ட­லு­டன் கூடிய நிகழ்ச்­சி­கள் போன்றவை நடத்­தப்­ப­ட­வுள்­ளன. 'மர­புடைமை வழி பரிவு' திட்­டத்­தின் வழி, சமூக உண்­டி­யல் மூலம் உதவி பெறும் கிட்­டத்­தட்ட 12,000 பேரை மூன்றாண்டு காலத் தில் எட்ட தேசிய மர­புடைமைக் கழகம் திட்­ட ­மிட்­டுள்­ளது. இத்­திட்­டத்­திற்கு பிரபல கைக்­க­டி­கார விற்­பனை­யா­ள­ரான 'கொர்டினா வாட்ச்' $750,000 நன்கொடை வழங்­கி­யுள்­ளது. இதற்கு இணையான தொகையை கலாசார, சமூக, இளையர் அமைச்­சும் வழங்­கும்.

"சமு­தா­யத்­தின் அனைத்­துப் பிரி­வி­ன­ருக்­கும் நமது மர­புடைமை சென்று சேர்வது மிக முக்­கி­யம். முடிந்த­வரை­யில் அனை­வரை­யும் உள்­ள­டக்­கும் சமு­தா­ய­மாகத் திகழவே நாங்கள் விரும்­பு­கி­றோம்," என்று கூறினார் இந்தத் திட்டத்தை நேற்றுத் தொடங்கி வைத்துப் பேசிய கலாசார, சமூக, இளையர் துறை அமைச்­சர் கிரேஸ் ஃபூ. தொண்­டூ­ழி­யர்­கள், வச­தி­குறைந்­தோர் என கிட்­டத்­தட்ட 80 பேர் பங்­கேற்ற 'பொன்விழா நடை­'யி­லும் அமைச்­சர் கலந்­து­கொண்டார். தேசிய அரும்­பொ­ரு­ள­கத்­தி­ல் இ­ருந்து ஃபோர்ட் கேனிங் பூங்கா, சிங்கப்­பூர் அஞ்சல்­தலை அரும்­பொ­ரு­ள­கம் வரை இடம்­பெற்ற இந்த நடை, 'மர­புடைமை வழி பரிவு' திட்­டத்­தின் முதல் நிகழ்ச்­சி­யாக அமைந்தது. இந்த முயற்­சிக்கு நன்கொடை வழங்க­வும் தங்க­ளது ஊழி­யர்­களை இதில் ஈடு­படுத்­த­வும் நிறு­வ­னங்கள் ஆர்­வத்­து­டன் முன்­வ­ரும் என தேசிய மர­புடைமைக் கழகம் எதிர்­ பார்க்­கிறது.

நேற்று இடம்பெற்ற 'பொன்விழா நடை' நிகழ்ச்சியில் பங்கேற்றோர் அதன் ஒரு பகுதியாக ஸ்பைஸ் கார்டன் எனப்படும் நறுமணப் பொருட்கள் தோட்டத்திற்குச் சென்றனர். படத்தில் நடையில் பங்கேற்றோருடன் அமைச்சர் கிரேஸ் ஃபூ. படம்: சாவ் பாவ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!