பாஜக கூட்டணி தொடர்ந்திருக்க வேண்டும்: பொன் ராதா

விருதுநகர்: கடந்த தேர்தலில் பாஜக தலைமையில் அமைந்த கூட்டணி அப்படியே நீடித்திருந்தால் அதிமுக, திமுகவால் மீண்டும் ஆட்சிக்கு வர இயலாது என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேவைக்கேற்ப தேமுதிகவுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றார். இந்நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டி என்ற முடிவை தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறுபரிசீலனை செய்யவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு தனது முடிவு தவறு என்பதை விஜயகாந்த் உணர்வார் என தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கருத்து தெரிவித்துள்ளார். தேமுதிக தனித்துப் போட்டியிடுவதால் திமுக கூட்டணிக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என கனிமொழி எம்பி கூறியுள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!