குடும்பப் பிரச்சினை எதிரொலி: விஷம் குடித்து மாண்டார் சின்னத்திரை நடிகர் சாய் பிரசாந்த்

சென்னை: பிரபல சின்னத்திரை நடிகர் சாய் பிரசாந்த் விஷம் குடித்து உயிரை மாய்த்துக் கொண்டது சின்னத்திரை, திரை யுலக வட்டாரங்களில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது. குடும்பத் தகராறு காரணமாகவே அவர் இம்முடிவை எடுத்திருப்ப தாகக் கூறப்படுகிறது. சின்னத்திரை தொடர்கள் மட்டுமல்லாது, திரைப்படங்களிலும் நடித்து வந்த சாய் பிரசாந்த், பல குரலில் பேசும் திறன் வாய்ந்தவர். முதல் மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்ற பின் இரண்டா வது மனைவியுடன் சென்னையில் வசித்து வந்தார். அவருக்கு ஒரு மகளும் உள்ளார்.

விஷம் குடிப்பதற்கு முன் எழுதியுள்ள கடிதத்தில் தன் மரணத்துக்கு யாரும் காரண மல்ல என்று சாய் குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது மறைவுக்குப் பிற காவது தன் மனைவி கோபத்தைக் கைவிட வேண்டுமென அவர் உருக்கமான வேண்டுகோளும் விடுத்துள்ளார். அவரது மறை வுக்கு நடிகை ராதிகா, நடிகர் விவேக் உட்பட பலர் அதிர்ச்சியும் வேதனையும் தெரிவித்துள்ளனர்.

தன் மனைவியுடன் நடிகர் சாய் பிரசாந்த். படம்: ஊடகம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!