அரசியலை சீர்செய்யுங்கள் - அதிபர் ஒபாமா

வா‌ஷிங்டன்: அமெரிக்க அரசியல் கட்சி அடிப்படையில் பிளவுபட்டு இருக்கும் நிலையில் அதைச் சீர்செய்ய வேண்டும் என்று அதிபர் ஒபாமா நாட்டு மக்களுக்கு ஆற்றிய கடைசி உரையில் கேட்டுக்கொண்டுள்ளார். அமெரிக்க அரசியலில் உள்ள பிளவு அதிபர் ஒபாமாவின் பதவிக் காலத்தில் அதிகரித்துள்ள வேளை யில் அவர் இந்த வேண்டுகோளை விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அரசியலில் உள்ள பிளவை தமது பதவிக் காலத்தில் அதிகரித் துள்ளதை தம்மால் சரிசெய்ய முடியாமல்போனது தமக்கு பெருத்த வருத்தத்தை தந்த அம் சங்களில் ஒன்று என்று கூறினார். "அரசியல் கட்சிகளிடையே நிலவும் இழுபறியான சர்ச்சை பேச்சு, சந்தேகம் போன்றவை எனது பதவிக் காலத்தில் சீரடை வதற்கு பதிலாக மோசமடைந்தது எனக்குள் இருக்கும் வருத்தங் களில் ஒன்று. "ஆப்ராஹாம் லிங்கன், ரூசவல்ட் போன்றவர்களின் திறன் கள் எனக்கிருந்திருந்தால் என் னால் இந்த பிளவை சீர்செய்திருக்க முடியும் என்பதில் சந்தேகமில்லை.

"ஆனால், எனது இந்தப் பதவிக்காலம் இருக்கும்வரை நான் இதில் மேன்மேலும் சிறப்பாக முயற்சி செய்வேன் என உத்தர வாதம் அளிக்கிறேன்," என்று நேற்று அமெரிக்க நாடாளுமன்றத் தின் கூட்டு அவைகளில் நிகழ்த் திய உரையில் அதிபர் ஒபாமா தெரிவித்தார். அதிபர் ஒபாமாவின் இந்த வலுவான உரை அவரின் முந்தைய உரைகளிலிருந்து முக்கிய அம்சங் களில் மாறுபட்டிருந்தது. இந்த முறை தமது அரசின் சாதனைகள் பற்றி அவர் குறிப்பிடவில்லை.

அமெரிக்க அதிபர் ஒபாமா, அமெரிக்க நாடாளுமன்றக் கூட்டத்தில் உரை ஆற்றுகிறார். அவரது பதவிக் காலம் முடிவடையவுள்ள நிலையில் அவர் நாடாளுமன்றத்தில் ஆற்றும் கடைசி உரை இது. படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!