சுழற்பந்து வீச்சாளர்கள் கோட்டைவிட்டனர்: டோனி

பெர்த்: இந்தியா= ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா தோல்வியைத் தழுவியது. இதுகுறித்து இந்திய அணித் தலைவர் டோனி (படம்) கருத்து தெரிவித்தார். "ஆட்டத்தின் இடை வேளை யில், எங்களது வீரர்களுடன் வியூகம் குறித்து ஆலோசித்தேன்.

அப்போது வேகப்பந்து வீச்சாளர் கள் கைகொடுக்காவிட்டால் அதன் பிறகு சுழற்பந்து வீச்சாளர் களைப் பயன்படுத்த வேண்டி இருக்கும் என்று கூறினேன். ஆனால் சுழற்பந்து வீச்சாளர் களுக்கு இப்படி மிகவும் மோசமான நாளாக இது இருக்கும் என்று ஒரு போதும் நினைக்க வில்லை. "ஆடுகளம் பந்துவீச்சுக்கு போதிய ஒத்துழைப்பு அளிக்காத நிலையில் ஆஸ்திரேலிய வீரர் களின் பந்தடிப்பு உண்மையிலேயே நன்றாக இருந்தது. அத்துடன் சீராக ஒன்று, இரண்டு ஓட்டங்கள் வீதம் எடுப்பதிலும் சிறப்பாக செயல்பட்டனர். அவர்களுக்கு ஓவருக்கு 6 ஓட்டங்களுக்கு மேல் தேவைப்பட்டன.

"ஆனால் எங்களது சுழற்பந்து வீச்சாளர்கள் கணிசமான பவுண்டரிகளை விட்டுக்கொடுத் ததும் எங்களுக்கு நிறைய நெருக்கடி ஏற்பட்டது. தொடக்கத் திலேயே 2 விக்கெட்டுகளை வீழ்த்தி எங்களது வேகப்பந்து வீச்சாளர்கள் போட்டியை நன்கு ஆரம்பித்து வைத்தனர். ஆனால் சுழற்பந்து வீச்சாளர்கள் இன்னும் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும்.' என்று டோனி தெரிவித்தார்.

நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்தியாவின் ரோகித் சர்மா 171 ஓட்டங்கள் எடுத்து சாதனை புரிந்தும் இந்தியா தோல்வி அடைந்தது. அடுத்த ஆட்டத்தில் யார் கையோங்கும் என்று பொறுத் திருந்து பார்க்க வேண்டும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!