துருக்கி கார்குண்டுத் தாக்குதல்: 11 பேர் கைது

அங்காரா: துருக்கி தலை­ந­கர் அங்கா­ரா­வில் பயங்க­ர­வா­தி­கள் நடத்­திய கார்­குண்டுத் தாக்­கு­த­ல் தொடர்பில் 11 பேரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். குர்திய பாட்டாளிக் கட்சி அந்தத் தக்குதலுக்குக் காரணமாக இருக்கலாம் என்று ஆதாரங்கள் சுட்டுவதாக துருக்கி தெரிவித்தது. சென்ற ஞாயிற்றுக் கிழமை நடந்த அந்தத் தாக்­கு­த­லில் குறைந்தது 36 பேர் உயி­ரி­ழந்ததை அடுத்து அந்­நாட்டு அதிபர் ரிசெப் தாயிப் எர்­டோ­கன், பயங்கர வாதத்தை துடைத்­தொ­ழிக்­கப் போவதாக சூளுரைத்­தார்.

அத்­தாக்­கு­தல், பயங்கரவாதத்தை எதிர்த்­துப் போரிடும் துருக்கி நாட்டு பாது­காப்­புப் படை­யி­னரை மேலும் வலுப்­பெ­றச் செய்­துள்­ளது என்றும் திரு எர்­டோ­கன் கூறினார். துருக்­கி­யி­லும் ஈராக்­கி­லும் குர்­தி­யப் போரா­ளி­கள் மீதான தாக்­கு­தலை துருக்­கிய பாது­காப்­புப் படை­யி­னர் தீவிரப்­படுத்­தி­னர். அங்கா­ரா­வில் பேருந்து நிலையம், மெட்ரோ ரயில் நிலையப் பகு­தி­யில் பயங்க­ர­வா­தி­கள் நடத்­திய தாக்­கு­த­லில் குறைந்தது 125 பேர் காய­மடைந்தனர்.

துருக்­கி­யில் குர்­தி­யப் போரா­ளி­கள் அண்மைய மாதங்களில் பல் வேறு தாக்­கு­தல்­களை நடத்­தி­யி­ருக்­கின்ற­னர். அங்காராவில் குர்­தி­யப் போரா­ளி­கள் பிப்­ர­வரி மாதம் நடத்­திய தாக்­கு­த­லில் 28 பேர் உயி­ரி­ழந்தனர். அங்கா­ரா­வில் ஐஎஸ் போரா­ளி­களும் அண்மை­யில் பல தாக்­கு­தல்­களை நடத்­தி­ உள்­ள­னர். அங்கா­ரா­வில் அர­சாங்கக் கட்­ட­டங்களைக் குறி வைத்து பயங்க­ர­வா­தி­கள் தாக்­கு­தல் நடத்­தக்­கூடும் என்று தங்களுக்கு தகவல் கிடைத்­த­தாக அமெரிக்கா தெரிவித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!