முதல்வரை தெய்வமாக மாற்றி விட்டனர்: அன்புமணி வருத்தம்

விருதுநகர்: மக்கள் பணியாளராகக் கருதப்பட வேண்டிய முதல்வரை இப்போது தெய்வமாக மாற்றிவிட்டதாக பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி தெரிவித்துள்ளார். விருதுநகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக ஆட்சியில் தமிழகத்தின் கடன் சுமை அதிகரித்துள்ளதாகக் குற்றம்சாட்டினார். "அதிமுக ஆட்சிக்கு வந்த போது தமிழக அரசின் கடன் ரூ.1 லட்சத்து ஆயிரம் கோடி; தற்போது அது 2 லட்சத்து 48 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது. விளம்பரங்களுக்காக கோடி கோடியாக செலவழித்த 'விளம்பர அரசாக' அதிமுக அரசு உள்ளது," என்றார் அன்புமணி.

திமுக மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், அதன் காரணமாகவே 66 வயதான அக்கட்சி, கூட்டணிக்காக ஏங்கி வருகிறது என்றார். "மாநில முதல்வர் என்பவர் மக்களின் வேலைக்காரர், பணியாளர். ஆனால் தற்போது முதல் வரைத் தெய்வமாக மாற்றிவிட்ட னர். நான் முதல்வரானால் மக் களைச் சீரழிக்கும் மதுவை ஒழிப் பேன். மிக்சி, கிரைண்டர், ஆட் டுக்குட்டி போன்ற இலவசங் களைத் தரமாட்டேன். மாறாக குழந்தைகளுக்குத் தரமான கல்வி, சுகாதாரம் கிடைக்கச் செய்வேன்," என்றார் அன்புமணி. தமிழகத்தில் 42 ஆயிரம் ஏரி கள் இருந்த நிலையில் தற்போது 38 ஆயிரம் ஏரிகள் மட்டுமே உள் ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!