ஜெய்: அஞ்சலி என் காதலியாக மாறக்கூடும்

நடிகை அஞ்சலியுடன் நல்ல நட்பு றவு இருப்பதாகவும் அது பின்னா ளில் காதலாக மாற வாய்ப் புள்ளதாகவும் நடிகர் ஜெய் கூறி யுள்ளார். இவரது நடிப்பில் அடுத்து 'புகழ்' என்ற படம் வெளிவர இருக்கிறது. இது தொடர்பாக அவர் செய்தியாளர்களைச் சந்தித்த போது, பல விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார்.

'புகழ்' எந்த மாதிரி கதையம் சம் உள்ள படம்?

"இது, அரசியல் சார்ந்த கதை. பொதுவாக, மக்கள் எதிர்கொள் ளும் பிரச்சினைகளில் தலையிட்டு அதை தீர்த்துவைக்கிற இளை ஞன் ஒருவன், எல்லா ஊர்களிலும் இருப்பான். 'புகழ்' படத்தில் அப்படிப்பட்ட இளைஞனாக நான் வருகிறேன். இதனால் எனக்கும் ஓர் அரசியல்வாதிக்கும் பிரச் சினை ஏற்படுகிறது. அந்தப் பிரச் சினை எப்படி தீர்க்கப்படுகிறது என்பதே கதை."

உங்களுக்கும் நடிகை அஞ்சலிக்கும் காதல் இருப்பதாகப் பேசப்படுகிறதே, அந்தத் தகவல் உண்மையா?

"கடந்த 2011ல் எனக்கும் அஞ்சலிக்கும் இடையே நல்ல புரிதல் இருந்தது. அவர் தெலுங்குப் பட உலகுக்குப் போனபின், இருவருக்கும் இடையே இருந்த தொடர்பு துண்டிக்கப்பட்டது. நான்கைந்து மாதங்களுக்கு முன் இருவரும் மீண்டும் சந்தித்தோம். அப்போது எங்கள் கைபேசி எண்களைப் பரிமாறிக்கொண்டோம். "அண்மையில் சில பொது இடங்களுக்குச் சேர்ந்து சென் றோம். எங்கள் இரண்டு பேருக் கும் இடையே நல்ல நட்பு இருக் கிறது. அது காதலாக மாறினா லும் மாறலாம்."

இருவரும் திருமணம் செய்து கொள்வீர்களா?

"எனக்குத் திருமண பந்தத்தில் உடன்பாடு இல்லை. இப்போதைய திருமண உறவுகள் நீடித்து இருப்பதில்லை. பெரும் பாலான ஜோடிகள் விவாகரத்து செய்துகொள்கிறார்கள். அதைப் பார்த்து எனக்குத் திருமணத்தின் மீதான நம்பிக்கை போய்விட்டது. காதலர் கள் ஒருவரையொருவர் புரிந்து கொண்டால், திருமணம் செய்து கொள்ளாமலே சேர்ந்து வாழ்வதில் தவறில்லை."

அஞ்சலி தவிர, திரையுலகில் உங்களுக்கு வேறு தோழிகள் உள்ளனரா?

"நயன்தாரா எனக்கு நல்ல தோழிதான். அவர் அவ்வப்போது கைபேசியில் பேசுவார். நான் சோகமாக இருக்கும் போதும் குழப்பமாக இருக்கும் போதும் எனக்கு நல்ல ஆலோசனைகள் சொல்லி இருக்கிறார். நிறைய முறை இது நடந்திருக்கிறது. எனக்கென சில நண்பர்கள் உள்ளனர்," என்றார் ஜெய்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!