ஆர்சனலை அடித்து விரட்டிய பார்சிலோனா

பார்­சி­லோனா: சாம்­பி­யன்ஸ் லீக் காற்­பந்தாட்ட தொடரில் ஆர்­ச­னலைப் பின்­னுக்­குத் தள்ளி 5=1 என்ற மொத்த கோல் எண்­ணிக்கை அடிப்­படை­யில் காலி­று­திக்கு முன்­னே­றி­யது பார்­சி­லோனோ. நேற்று நடந்த இரண்டா­வது சுற்று ஆட்­டத்­தில் பார்­சி­லோனா­வின் முக்கிய ஆட்­டக்­கா­ரர்­க­ளான நெய்மார், சுவாரெஸ், மெஸ்ஸி ஆகிய மூவரும் தலா ஒரு கோல் அடித்­த­னர். முதல் பாதி ஆட்­டத்­தின் 18வது நிமி­டத்­தில் நெய்மார் தொடங்­கிய கோல் கணக்கை 51வது நிமி­டத்­தில் சமன் செய்தார் ஆர்­ச­ன­லின் எல்னி. ஆனால், அதன்­பி­றகு கிடைத்த சில வாய்ப்­பு­களைத் தவ­ற­விட்­டது ஆர்­ச­னல். சுவாரெஸ் 65வது நிமி­டத்­தி­லும் மெஸ்ஸி 88வது நிமி­டத்­தி­லும் அடித்த கோல்கள் பார்­சி­லோனா­வின் காலிறுதி வாய்ப்பை உறுதி செய்தது.

முதல் சுற்று ஆட்­டத்­தில் ஆர்­ச­னல் கோல் எதுவும் அடிக்­கா­த­தால், 2=0 என்ற கோல்­ க­ணக்­கில் பார்­சி­லோனா முன்­னிலை­யில் இருந்தது. இத்­தொ­ட­ரில் இருந்து வெளி­யே­றி­யது மட்­டு­மல்­லா­மல் கடந்த வாரம் எஃப்ஏ கிண்ணத் தொடரில் இருந்தும் வெளி­யே­றிய ஆர்­ச­ன­லுக்கு இந்தப் பரு­வத்­தில் கிண்­ணத்தை வெல்லும் ஒரே வாய்ப்பு பிரி­மி­யர் லீக் தொடரில் மட்டுமே உள்ளது. அதில் லெஸ்டர் குழுவை­விட 11 புள்­ளி­கள் பின் தங்­கி­யுள்­ளது குறிப்­பி­டத்­தக்­கது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!