உற்சாகத்தில் மிதந்த டாப்சி

ராணா, டாப்சி நடிப்பில் தமிழ், தெலுங்கு, இந்தி என மும்மொழிகளில் உருவாகும் படம் 'காஸி'. இந்தியா, பாகிஸ்தான் போரின்போது, விசாகப்பட்டினம் அருகே கடலில் மர்மமான முறையில் மூழ்கிய பாகிஸ்தான் நீர்மூழ்கிக் கப்பலைப் பற்றிய படம் இது. அந்தக் காலகட்டத்தில் வாழ்ந்த கடற்படை வீரர்களிடம் தகவல்கள் பெற்று, அதன் அடிப்படையில் இந்தப் படம் உருவாக்கப்படுகிறது. இதை சங்கல்ப் ரெட்டி இயக்குகிறார். இப்படத்தில் நடிப்பது உற்சாகம் தருவதாகச் சொல்கிறார் டாப்சி.

"நமது இந்திய ராணுவம், விமானப்படை பற்றி நிறைய படங்கள் உருவாகியுள்ளன. ஆனால், கடற்படை பற்றி திரையில் அதிகமாக வந்தது இல்லை. இந்தப் படம் அந்தக் குறையைப் போக்கும். இது வரலாற்றுப் படம். இந்திய சினிமாவில் மிக முக்கியமான படமாகவும் இருக்கும். "அமிதாப் பச்சனுடன் இந்திப் படத்தில் நடிக்க ஆசைப்பட்டேன். அவருடன் படப்பிடிப்பில் பங்கேற்க உள்ள நாட்களை ஆவலாக எதிர்பார்த்துக் காத்திருந்தேன். இப்போது என் கனவு நனவாகி இருக்கிறது. அவருடன் ஒரு ரசிகையாக, தம்படம் (செல்ஃபி) எடுத்துக் கொண்டபோது வானத்தில் மிதந்தேன்," என்கிறார் டாப்சி.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!