குதிரையின் காலை உடைத்த பாஜக எம்எல்ஏ கைது

­­­டே­ரா­டூன்: குதிரை­யின் காலை உடைத்த பார­திய ஜனதா சட்டமன்ற உறுப்பினர் கணேஷ் ஜோ‌ஷி என்பவர் டேரா­டூ­னில் கைது செய்­யப்­பட்­டார். உத்­த­ர­காண்ட் மாநில அரசை கண்­டித்து பார­திய ஜனதா கட்சி சார்­பில் டேரா­டூ­னில் கடந்த 14ஆம் தேதி பா.ஜனதா எம்.எல்.ஏ. கணேஷ் ஜோ‌ஷி தலைமை­யில் போராட்­டம் நடந்தது. அப்­போது பாது­காப்­புக்கு வந்த காவல்­துறை­ படையைச் சேர்ந்த 'சக்­தி­மான்' என்ற குதிரை­யின் முன்­னங்கா­லில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் கணேஷ் ஜோ‌ஷி தடி­யால் அடித்­தார். மற்­றொ­ரு­வர் கடி­வா­ளத்தை இழுத்­துக் குதிரையைக் கீழே தள்­ளினார். இதில் அந்தக் குதிரை கீழே விழுந்து அதன் பின்னங்காலில் எலும்பு முறிவு ஏற்­பட்­டது. இது­தொ­டர்­பாக காவல்­துறை­யி­னர் எம்.எல்.ஏ. மற்­றும் அவ­ரது ஆத­ர­வா­ளர்­கள் மீது வழக்­குப்­ ப­திவு செய்­த­னர். பிர­மோத் போரா என்­ப­வர் தான் குதிரையைக் கீழே தள்­ளி­ய­வர் என அடை­யா­ளம் கண்ட­னர். இதனைத் தொடர்ந்து முகானி என்ற பகு­தி­யில் பிர­மோத் போராவை காவல்­துறை­யி­னர் கைது செய்­த­னர். காய­மடைந்த குதிரைக்கு ராணுவ மருத்துவர்கள் சிகிச்சை அளித்­த­னர்.

குதிரை வலி­யால் துடித்து வரு­வ­தா­க­வும் நிற்க முடி­யா­மல் அவ­திப்­படு­வ­தா­க­வும் மாநில அரசு தரப்­பில் தெரி­விக்­கப்­பட்­டது. டேரா­டூ­னில் குதிரை சக்­தி­மா­னுக்கு அறுவை சிகிச்சை நடை­பெற்­றது. அறுவை சிகிச்சை­யா­னது வெற்­றிக­ர­மாக முடிந்தது என்று டாக்­டர்­கள் தெரி­வித்­த­னர். குதிரை­யினால் இப்­போது நிற்க முடி­கிறது என்று மருத்­து­வர்­கள் தரப்­பில் தெரி­விக்­கப்­பட்­டது. இருப்­பி­னும் அறுவை சிகிச்சையை அடுத்­துக் குதிரை­யின் புகைப்­ப­டங்கள் சமூக வலை­த­ளங்களில் வெளி­யாகி உள்­ளது. புகைப்­ப­டங்கள் அனை­வரை­யும் கண்­க­லங்க செய்து உள்­ளது. பார­திய ஜனதா எம்.எல்.ஏ.வை வசைப்­பா­டிய சமூக வலை­தள பயனா­ளர்­கள், பார­திய ஜனதா தலைமை கடும் நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என்று வலி­யு­றுத்­தி­னர். முற்­றி­லும் மனி­த­தன்மை­யற்ற செயல் என்று கண்ட­னம் தெரி­வித்­த­னர். இதற்கு கார­ண­மான குண்டர்­கள் மீது கடும் நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டும்.

ரோகன் என்­ப­வர் பதிவு செய்து உள்ள கருத்­தில், "கட­வுளே குதிரையைக் காப்­பாற்­றுங்கள்... உங்களுடைய கருணையைக் காட்­டுங்கள். சக்­தி­மானே உண்மை­யான வீரர். பேச முடி­யாத இந்த விலங்­கிற்கு நான் தலை­வ­ணங்­கு­கி­றேன்," என்று கூறி­ உள்­ளார். முன்­ன­தாக பாஜக தலை­வர், அமைச்­சர் மேனகா காந்தி ஜோ‌ஷியை கட்­சி­யில் இருந்து நீக்க வேண்­டும் என்­றும் கடும் நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டும் என்­றும் வலி­யு­றுத்­தினார். எம்.பி. ஹேமமாலினி, "அப்­பாவி விலங்­கின் மீது இது­போன்ற காரி­யத்தை யாரா­லும் செய்ய முடி­யுமா என்று என்னால் நம்ப முடி­ய­வில்லை! "இதற்குக் கண்ட­னம் தெரி­விக்­கின்­றேன். குதிரை உயிர் பிழைத்­த­தற்கு கட­வு­ளுக்கு நன்றி," என்று டுவிட்­ட­ரில் கருத்­துத் தெரி­வித்து இருந்தார். "இந்­நிலை­யில் பாஜக சட்ட மன்ற உறுப்பினர் கணேஷ் ஜோ‌ஷி டேரா­டூ­னில் கைது செய்­யப்­பட்டு உள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!