திருமணமான தம்பதிகளிடையே நடத்தப்பட்ட ஆய்வு

திருமணமான தம்பதியருக்கு வேலையிலும் குடும்பத்திலும் எப்படி சம அளவில் முக்கியத்துவம் கொடுப்பது என்பதே மிகப் பெரிய கவலையாக இருக்கிறது. வலுவான குடும்பங்களை ஊக்குவிக்கும் 'வாழ்நாள் முழுவ தும் குடும்பங்கள்' (ஃபேமலிஸ் ஃபார் லைஃப்) எனும் லாப நோக் கற்ற அமைப்பு நடத்திய ஆய்வில் பாதிக்கும் மேற்பட்டோர் வேலை, குடும்ப சமநிலையே தங்களது மிகப் பெரிய சவாலாக அமைகிறது என குறிப்பிட்டுள்ளனர். இதே பிரச்சினை கடந்த ஆண்டு மூன்றாவது இடத்தில் இருந்தது. அப்போது தம்பதி யருக்கு நிதி நிர்வாகமே மிகப் பெரிய பிரச்சினையாக அமைந்தது.

இந்த ஆண்டு நிதி நிர்வாகம் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. ஆய்வில் கலந்து கொண் டவர்களில் 44.8 விழுக்காட் டினருக்கு நிதி நிர்வாகம் மிகப் பெரிய பிரச்சினையாக அமைந்தது. கணவன் மனைவியிடையே அன்னியோன்னியத்தைத் தொடர்ந்து வெளிப்படுத்துவது இரண்டாவது பெரிய சவாலாக அமைகிறது என்பதையும் திருமண பந்தம் மேம்படுவதற்கு நம்பிக்கை, தொடர்பு, பரஸ்பர மரியாதை ஆகியவை மிக முக்கியமான குணங்களாக தம்பதியர் கருது கின்றனர் என்பதையும் ஆய்வு காட்டியது. கிட்டத்தட்ட 1,265 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகள் நேற்று நடைபெற்ற திருமண மாநாட்டில் வெளியிடப்பட்டன. ஆண்டுதோறும் நடைபெறும் இந்த மாநாட்டில் தம்பதியர் தங்கள் திருமண பந்தத்தை மேம்படுத்திக் கொள்ளத் தேவை யான உத்திகளும் ஆலோசனை களும் வழங்கப்பட்டன.

சன்டெக் சிட்டி மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இந்த திருமண மாநாட்டில் சமூகக் குடும்ப மேம்பாட்டு அமைச்சின் நாடாளுமன்றச் செயலாளரான இணைப் பேராசிரியர் முகம்மது ஃபைஷால் இப்ராகிம் தமக்கும் தமது மனைவிக்கும் அன்னியோன்னியத்தை வளர்க்க தாம் பின்பற்றும் சில வழிமுறை களையும் பகிர்ந்து கொண்டார். தாம் வேலை முடிந்து விரைவில் வீடு திரும்பினால் தமது மனைவியுடன் 10-=15 நிமிடங்கள் நடப்பதாக அவர் கூறினார்.

"இரவின் அமைதியை ரசித்த வாறே நாங்கள் அளவளாவு வோம். என் மனைவியுடன் நெருக்கத்தை உருவாக்க அது எனக்கு மேலும் உதவுகிறது," என்றார் அவர். தங்கள் திருமண பந்தத்தை எப்போதுமே துடிப்புடன் வைத்துக் கொள்ள மேலும் பல நடுத்தர வயது தம்பதியர் 'டேட்டிங்' செய்து வெளியே சென்றுவரவேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

இலவசமாக நடத்தப்பட்ட 12 மணி நேர திருமணப் பயிலரங்கு களுக்கும் மிகப் பெரிய ஆதரவு கிடைத்தது என்று சுட்டிய திரு ஃபைஷால் ஆய்வில் பங்கெடுத் தவர்களில் 89 விழுக்காட்டினர் தங்கள் திருமணத்தில் பிரச்சினை யை எதிர்நோக்கினால் தொழில் முறை உதவி பெற தயாராக இருப் பதாகவும் தமது உரையில் குறிப்பிட்டார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!