டியோ: சிங்கப்பூர் தண்ணீர் கதையின் சிற்பி அமரர் லீ

ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் நேற்று நடைபெற்ற பொங்கோலின் முதல் நீர்வழி தின நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் இயூ மறைந்து ஓராண்டு நிறைவடைவதை முன்னிட்டும் அவர்கள் ஒன்றுகூடி அஞ்சலி செலுத்தினர். ‚'தண்ணீர், வாழ்வின் கொண் டாட்டம்' எனும் நிகழ்ச்சி, உலகெங் கிலும் மார்ச் 22ஆம் தேதி கொண்டாடப்படும் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு நேற்று நடத்தப்பட்டது. நீடித்து நிலைக் கத்தக்க வளர்ச்சிக்குத் தண்ணீர் எவ்வளவு முக்கியம் என்பதை எடுத்துக்காட்டுவதற்காக உலக தண்ணீர் தினம் கொண்டாடப் படுகிறது.

"மறைந்த நமது முதல் பிரதமர் அமரர் திரு லீ குவான் இயூ, சிங்கப்பூரின் தண்ணீர் கதையின் சிற்பி என்பது நன்கு அறியப்பட்ட ஒன்று," என்றார் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட துணைப் பிரதமர் டியோ சீ ஹியன். ‚ "எனவே இவ்வாண்டின் சிங் கப்பூர் உலக தண்ணீர் தின நிகழ்ச்சியின்போது திரு லீயையும் அவர் அமைத்துக்கொடுத்த தண் ணீர் வசதிகளையும் நினைவில் கொள்வது பொருத்தமானது," என திரு டியோ கூறினார். திரு லீ சென்ற ஆண்டு மார்ச் 23ஆம் தேதி காலமானார். அவர் மறைந்து ஓராண்டு நிறைவடை வதை முன்னிட்டு சிங்கப்பூர் முழு வதும் சுமார் 100 நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொங்கோல் நீர்நிலையில் நேற்றுக் காலை நடைபெற்ற 'கயாக்' எனும் துடுப்புப் படகு நிகழ்ச்சியில் பாசிர் ரிஸ்-பொங்கோல் குழுத் தொகுதியின் சக நாடாளுமன்ற உறுப்பினர்கள், குடியிருப்பாளர்கள் ஆகியோருடன் பங்கேற்றார் துணைப் பிரதமர் டியோ சீ ஹியன் (நடுவில், முன் வரிசை) படம்: சாவ் பாவ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!