பட்ஜெட் 2016: சமூக உதவித் திட்டங்கள் மூலம் நேரடி நிதி உதவிகளை எதிர்பார்க்கும் மக்கள்

சிங்கப்பூரில் உள்ள 100க்கு மேற்பட்ட காப்பிக் கடைகள் தங்கள் காப்பி, தேநீர் விலைகளை 30 காசு வரை உயர்த்தியுள்ளன. வாடகை, தொழிலாளர் செலவுகளை அதற்கு காரணமாகக் காட்டப்படுகின்றன. இதுபோன்ற விலை அதிகரிப்பால் தங்கள் செலவுகளும் அதிகரித்திருப்பது ஒருபுறம் இருக்க, வேலை இழப்புகளும் தமது தொகுதியின் நடுத்தர வருமானப் பிரிவினரின் இரு பெரும் கவலைகள் என்று சுவா சூ காங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஸாக்கி முகம்மது தெரிவித்துள்ளார்.

"தாங்கள் வேலை இழந்தால், வீட்டுக் கடனைக் கட்ட முடியாமல் வீடுகளை இழக்க நேடிடுமோ என்றும் 65 வயது வரை வீட்டுக் கடனைச் செலுத்திக் கொண்டி ருக்க வேண்டுமே என்றும் அவர் கள் கவலைப்படுகிறார்கள்," என் றார் திரு ஸாக்கி. ஆகவேதான், கடந்த சில ஆண்டுகளாக அரசாங்கம் முன் னோடித் தலைமுறை தொகுப்புத் திட்டம், முதியோர் ஆதரவுத் திட்டம், மெடி‌ஷீல்ட் லைஃப் போன்ற பல்வேறு சமூக உதவித் திட்டங்களை அறிவித்ததைப்போல, இந்த ஆண்டும் தங்களுக்கு நேரடி நிதி உதவி அளிக்கும் திட் டங்கள் அறிவிக்கப்படுமா என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

சமூக அளவிலான செலவினங்கள் குறிப்பிட்ட அளவுக்கு அறி விக்கப்படலாம் என்று எதிர்பார்க் கப்படும் அதே வேளையில், பல பில்லியன் மதிப்புள்ள பெரிய அளவிலான சமூக நேரடி நிதி உதவித் திட்டங்கள் அறிவிக்கப்படுவது சந்தேகமே என்கிறார் சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தின் சட்டப் பேராசிரியர் யூஜின் டான். "சமூக பாதுகாப்பு வலைகள் இப்போது வலுவாக இருப்பதால், சமூக கொள்கைகளின் அளவில் திருத்தங்கள் கொண்டு வரப்பட லாம்," என்றும் பேராசிரியர் டான் சொன்னார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!