பாரிசில் தாக்குதல் நடத்திய சந்தேக நபர் சிக்கினான்

பாரிசில் தாக்குதல் நடத்திய சந்தேக நபர் சிக்கினான் புருகெஸ்: பாரிஸ் நகரில் பயங்கர வாதத் தாக்குதலை நடத்தி தலை மறைவாக இருந்த சாலா அப்து சலாம், தன்னைத்தானே வெடிக்கச் செய்யவும் திட்டமிட்டிருந்தான் என்ற விவரம் விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஆனால் அவன் கடைசி நேரத் தில் மனதை மாற்றிக் கொண்டான். சென்ற வெள்ளிக்கிழமை அன்று புருஸ்ஸல்ஸ் நகரில் அதி ரடிச் சோதனை நடத்திய காவல் துறையினர், அப்டிஸ்லாமின் காலில் சுட்டுப் பிடித்தனர்.

பின்னர் கடுமையான பாதுகாப்புள்ள சிறையில் அவன் அடைக்கப்பட்டான். அதனைத் தொடர்ந்து நேற்று அவனுடைய முதல் இரவு சிறைக் கம்பிகளுக்குப் பின் செலவழிந்தது. பாரிசில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் அவன் மீது பயங்கர வாதக் கொலை குற்றம் சாட்டப் பட்டுள்ளது. பாரிஸ் தலைநகரில் நவம்பர் 13ஆம் தேதி நடைபெற்ற பயங்கர வாதத் தாக்குதலில் 130 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு திட்ட மிட்டு ஏற்பாடு செய்ததாக நம்பப் படும் 26 வயது அப்துசலாம் ஐரோப்பா முழுவதும் தேடப்பட்டு வந்தான். அவன் சிக்கிய மறுநாளே கொலை, பயங்கரவாத அமைப்பில் பங்கேற்றது உள்ளிட்ட குற்றச் சாட்டுகள் அவன் மீது சுமத்தப் பட்டன. அதன் பிறகு புருகெஸ் என்ற நகரில் அதிகபட்ச பாதுகாப்பு கொண்ட சிறையில் அவன் அடைக்கப்பட்டான்.

அதிரடிச் சோதனை மேற்கொண்ட பெல்ஜிய காவல் துறையினர், அப்துசலாமின் காலில் சுட்டு பிடித்தனர். பின்னர் அவனை ஆம்புலன்சில் காவல் துறையினர் அழைத்துச் சென்றனர்.உள் படத்தில் அப்துசலாம். படங்கள்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!