பன்முகத்தன்மையை சிங்கப்பூரர்கள் உணர வேண்டும்: சான் சுன் சிங்

தேசிய அடையாளத்தை வலுவாக்கி முன்னெடுத்துச் செல்லும் பயணத் தில் இனம், மொழி, சமயம் பாராது அனைவரையும் உள்ளடக்கும் ஓர் அடையாளத்தை நாம் உருவாக்க வேண்டும் என்று பிரதமர் அலு வலக அமைச்சர் திரு சான் சுன் சிங் கேட்டுக்கொண்டுள்ளார். சமூக உதவிக் குழுக்களும் இதர அமைப்புகளும் கூட்டாக ஏற்பாடு செய்த திரு லீ குவான் இயூ முதலாமாண்டு நினைவஞ் சலிக்கூட்டத்தில் பேசிய திரு சான் இவ்வாறு குறிப்பிட்டார். "நம் கலாசார பன்முகத் தன்மையை நாம் சுலபமாகவோ எதார்த்தமாகவோ கருதும் சாத் தியம் உள்ளது. ஆனால் சிங்கப் பூரில் இது இயற்கையாக அமைந்த ஒன்றல்ல. "மனித வரலாற்றில், பல இன, பல சமய, பல கலாசார சமூகத்தை உருவாக்கும் உயரிய லட்சியத்தைக் கொண்டிருப்பது என்பது அரிய செயல். ஏனெனில் ஒரே மொழி, சமயம் போன்ற அம்சங்களில் மக்கள் கூட்டாக வாழ்வது மனித இயல்பு," என அமைச்சர் விளக்கினார்.

"உயரிய லட்சியமாக அது தோன்றினாலும் மறைந்த திரு லீ குவான் இயூவும் அவரது முன் னோடிக் குழுவினரும் அதனை அடையும் நோக்கில் படிப்படியாகச் செயல்பட்டு சாதித்துள்ளனர்," என்று கூறினார் அமைச்சர் சான். சிங்கப்பூரின் முதல் பிரதமரும் நவீன சிங்கப்பூரின் தந்தையுமான திரு லீ குவான் இயூ சிங்கப்பூரை பல இன சமூகமாக உருவாக்கிக் கட்டிக்காத்த அருஞ்செயலை நினைவுகூரும் விதமாக நிகழ்ச்சி அமைந்தது. சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக் கழகத்தின் அருகே ஸ்டாம்ஃபர்ட் கிரீனில் நடந்த நிகழ்ச்சியில் 1,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு வெவ்வேறு சமூக உதவிக் குழுக்களின் இளையர்கள் அமரர் லீ தொடர்பாகப் பேசி யவற்றை செவிமடுத்தனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!