பாஜக: விஜயகாந்தை விடுவதாக இல்லை

சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி வைக்க தேமுதிகவுடனான பேச்சு தொடரும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். தனித்துப் போட்டியிடப் போவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்து விட்ட போதிலும் கூட்டணி குறித்து அக்கட்சியுடன் பேசி வருவதாக தமிழிசை நேற்று தெரிவித்தார். பாஜக தேசிய செயற்குழுக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக டெல்லி சென்றுள்ள அவர், பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவைச் சந்தித்துப் பேசினார். இதுவரை உருப்படியாக எந்தக் கட்சியுடனும் பாஜக கூட்டு சேராததால் ஏற்கெனவே அதிருப்தியில் இருந்த அமித் ஷா, இப்போது சில யோசனைகளைத் தெரிவித்து இருப்பதாகக் கூறப்படுகிறது. அதன் அடிப்படையில், தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பிரகாஷ் ஜவடேகர் மீண்டும் ஒருமுறை தமிழகம் வர உள்ளார்.

இதனை செய்தியாளர்களிடம் தெரிவித்த தமிழிசை, விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக ஏற்பது குறித்தும் அமித் ஷாவுடன் விரிவான ஆலோசனை நடத்தப்பட்டதாகக் கூறினார். தேமுதிக தலைமையில் பாஜக கூட்டணி அமைவதற்கான சாத் தியம் இன்னும் கைவிட்டுப்போகவில்லை என்றார் அவர். வேறு எந்தக் கட்சியுடனும் கூட்டணிப்பேச்சு நடக்கவில்லை என்று கூறிய தமிழிசை, பாஜக கூட்டணி வேண்டாமென்று கூறி தனியாகப் போட்டியிடுவதில் உறுதியாக இருப்பதால் பாமகவுடன் பேச வில்லை என்றார். கட்டாயப்படுத்தி பாமகவை கூட்டணிக்கு அழைப் பதில் பாஜகவுக்கு விருப்பம் இல்லை என்றும் அவர் கூறினார். தேமுதிக=பாஜக கூட்டணி ஏற் படுவதில் ஏற்பட்டு வரும் தடு மாற்றத்தின் பின்னணி என்ன என்றும் கடும் பேரம் தொடர்கிறதா என்றும் அரசியல் அரங்கில் கேள்விகள் எழும்பி வருகின்றன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!