பொங்கலை ஒரு வாரம் கொண்டாடுங்கள்: தேமுதிக

சென்னை: தேமுதிக ஆட்சி அமைத்தால் பொங்கல் பண்டி கைக்கு ஒரு வாரம் விடுமுறை அளிக்கப்படும் என தேமுதிக தெரிவித்துள்ளது. அக்கட்சியின் இரண்டாம் பகுதி தேர்தல் அறிக்கையில், அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60 ஆக அதிகரிக்கப்படும் என்றும் வாக்குறுதி அளிக்கப்பட் டுள்ளது. இந்தத் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளவை குறித்து ஒரு தரப்பினர் கடுமையாக விமர்சித்து கிண்டல் செய்துள்ளனர். தேமுதிக தரப்பிலோ, இத்த கைய அறிவிப்புகளுக்கு மக்கள் மத்தியில் நிச்சயம் ஆதரவு கிடைக் கும் என கூறப்படுகிறது. "மாற்றுத் திறனாளிகளுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்குவது,

பொங்கலை ஒரு வாரம் கொண்டாட ஏற்பாடு, பேரி டரைக் கண்டறியும் வசதிகளை ஏற்படுத்துவது, மணல் கொள் ளையைத் தடுக்க தனி அமைப்பு, சீமைக் கருவேல மரங்கள் ஒழிப்பு, அரசுத்துறைகளை கணினி மய மாக்குவது, அர்ச்சகர்களுக்கு மாத ஊதியம்," என தேமுதிகவின் தேர்தல் அறிக்கையில் பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. தனியாருடன் இணைந்து கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என்றும் ஆண்டுக்கு 250 நூல்கள் வரை தேசிய மயமாக் கப்பட்டு அதன் ஆசிரியர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என்றும் தேமுதிக மேலும் வாக்குறுதி அளித்துள்ளது.

"மக்கள் தெரிவித்த கருத்து களின் அடிப்படையில் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. தேமுதிக ஆட்சிக்கு வந்தால், இந்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். "கடந்த 60 ஆண்டு திமுக, அதிமுக ஆட்சியில் மக்களின் வாழ்வாதாரம் உயரவில்லை. அதிமுக அளித்த எந்த வாக்கு றுதியையும் நிறைவேற்றவில்லை," என்று தேமுதிக ஆதரவு தொலைக் காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார் விஜயகாந்த். இந்நிலையில், தேமுதிகவின் இரண்டாம் கட்டத் தேர்தல் அறிக் கையை கோயம்பேட்டில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் நேற்று முன்தினம் வெளியிட்டார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!