டாக்சி ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம்; ஜகார்த்தாவில் வாகன நெரிசல்

ஜகார்த்தா: இந்தோனீசியாவில் உபர், கிராப்கார் போன்ற பல கார்கள் பயணிகளுக்கான சேவையைத் தொடங்கியது முதல் டாக்சி ஓட்டுநர்கள் கடும் போட்டியை எதிர்நோக்குகின்றனர். இதனால் தங்கள் வருமானம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறும் டாக்சி ஓட்டுநர்கள் நேற்று தலைநகர் ஜகார்த்தாவில் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய விரைவுச்சாலையில் டாக்சி ஓட்டுநர்கள் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். டாக்சி ஓட்டுநர்கள் சிலர் வாகன டயர்களை தீ வைத்துக் கொளுத் தினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள மறுத்த வாகனங்கள் மீது சிலர் ஏறி நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகவும் தகவல்கள் கூறின. மத்திய விரைவுச்சாலை வழி யாகச் சென்ற மற்ற டாக்சி களையும் ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுக்குமாறு டாக்சி ஓட்டுநர்கள் கட்டாயப் படுத்தியதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

ஒரு டாக்சியை சுற்றி வளைத்த மற்ற டாக்சி ஓட்டுநர்கள் அந்த டாக்சியில் இருந்த ஒரு பெண்ணை வலுக்கட்டாயாக அவரது பயணப் பெட்டியுடன் டாக்சியிலிருந்து வெளி யேற்றுவதை தொலைக்காட்சிப் படங்கள் காட்டின. டாக்சி ஓட்டுநர்கள் ஜகார்த் தாவில் இம்மாதத்தில் இரண்டாவது தடவையாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். டாக்சி ஓட்டுநர்களுக்கு தங்கள் ஆதரவைத் தெரிவிக்க இந்தோனீ சியாவில் மற்ற பகுதிகளிலிருந்தும் டாக்சி ஓட்டுநர்கள் நேற்று ஜகார்த்தா வந்திருந்தனர். தங்கள் வருமானத்தை திருடிய சட்ட விரோத வாகன ஓட்டுநர்களிட மிருந்து தங்களை அரசாங்கம் அவசியம் காப்பாற்ற வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட டாக்சி ஓட்டுநர்களில் ஒருவர் கூறினார்.

உபர் கார்கள் உள்ளிட்ட சில கார்கள் தங்களுக்குப் போட்டியாக வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தோனீசியத் தலைநகர் ஜகார்த்தாவில் டாக்சி ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முக்கிய சாலைகளில் அவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். டாக்சி ஓட்டுநர்களுக்கு ஆதரவைத் தெரிவிக்க இந்தோனீசியாவின் பல பகுதிகளிலிருந்து ஓட்டுநர்கள் ஜகார்த்தா வந்திருந்தனர். படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!