மல்லையாவை பிடித்தால் அபராதம் கட்டுவேன்; பயணச் சீட்டு இன்றி பயணம் செய்தவர்

மும்பை: மும்பை­யில் உள்ள மகா­லட்­சுமி ரயில்­நிலை­யத்­தில் திங்கட்­கி­ழமை பய­ணச்­சீட்டு இன்றி ரயி­லில் பய­ணம் செய்த 44 வயது பெண்­மணி ஒரு­வர் பய­ணச்­சீட்டு பரி­சோ­திக்­கும் அதி­கா­ரி­யி­டம் சிக்­கிக் கொண்டார். அதற்கு அப­ரா­த­மாக ரூ.260 கட்­டும்படி பரி­சோ­த­கர் அந்தப் பெண்­ணிடம் கேட்­டி­ருக்­கிறார். பிரே­ம­லதா என்ற அந்த 44 வயது பெண்­மணி, பரி­சோ­த­கரைப் பார்த்து "கோடி­கோ­டி­யாய் கடன் வாங்கி திருப்­பிச் செலுத்­தா­மல் ஓடிப்­போன மல்லை­யாவைப் பிடித்­துக்கொண்டு வாருங்கள். "பிறகு நான் அப­ரா­தம் கட்­டு­கி­றேன்," என்று கூறினா­ராம்.

இதைக் கொஞ்ச­மும் எதிர்­பார்க்­காத பரி­சோ­த­கர், ஏதோ விளை­யா­டு­கிறார் இந்தப் பெண்­மணி என்று சற்­றுப் பொறுமை­யாக இருந்துவிட்டு மீண்­டும் அப­ரா­தம் பற்றி பேச்­செ­டுத்­தி­ருக்­கிறார். ஆனால் அந்தப் பெண்­மணி கொஞ்ச­மும் அச­ர­வில்லை. மீண்­டும் அதே பதிலைச் சொல்­லி­யி­ருக்­கிறார். சுமார் அரை மணி நேர­மாக பிரே­ம­ல­தா­வி­டம் கெஞ்­சி­யி­ருக்­கிறார் பரி­சோ­த­கர். ஒரு பல­னும் இல்லை. இதனால் பொறுமை­யி­ழந்த அவர், காவல்­துறையி­னரி­டம் அவரை ஒப்­படைத்­தார். அப­ரா­தம் கட்­ட­வில்லை­யெ­னில் சிறைக்­குச் செல்ல வேண்டி இருக்­கும் என மிரட்­டினர். பிரே­ம­லதா கொஞ்சமும் பயப்படுவதாக இல்லை. வேறு வழி­யின்றி காவல்­துறை­யி­னர் அவ­ரி­டம் கெஞ்­சி­யும் பார்த்­த­னர். ஆனால் அவர் சொன்­னதையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!