பட்ஜெட் 2016: புதிய வெளிப்புற அருஞ்செயல் கல்விக்கூடம்

இளையர்களின் தாக்குப்பிடிக்கும் தன்மையை அதிகரிக்கும் நோக் கத்துடன் புதிய 'அவுட்வேர்ட் பவுண்ட் சிங்கப்பூர்' சாகச பள்ளி கோனி தீவுகளில் அமைக்கப்படும் என நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட் வரவு செலவுத் திட்ட உரை யில் அறிவித்தார். இந்த தேசிய வெளிப்புற அருஞ்செயல் கல்விப் பெருந்திட்டத்தை நாடாளுமன்றத் தில் அறிவித்த அமைச்சர், இளையர்கள் வளர்ச்சி காண அவர் களுக்கு தீரச்செயல் சிந்தனை கள், தாக்குப்பிடிக்கும் தன்மை, சிறந்து விளங்க தங்களை சவால் களில் ஈடுபடுத்திக்கொள்ளும் ஆயத்த நிலை முக்கியமாகின்றது என்றார்.

இந்த பண்புகளை மாணவர்கள் வளர்த்துக்கொள்ள, வெளிப்புற அருஞ்செயல் கல்வித் திட்டம் விரிவாக்கப்படும் என்று அமைச்சர் சொன்னார்.சுமார் $250 மில்லியன் செலவில் அமைக்கப்படும் இப் புதிய 'அவுட்வேர்ட் பவுண்ட் சிங் கப்பூர்' சாகசப் பள்ளி 2020 ஆம் ஆண்டிற்குள் தயாராகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது சிங் கப்பூரில் அமைக்கப்படும் இரண்டா வது 'அவுட்வர்ட் பவுண்ட் சிங்கப் பூர்' சாகசப் பள்ளியாகும். முதல் பள்ளி 249 ஹெக்டர் நிலப்பரப்பில் புலாவ் உபின் தீவில் அமைந்து உள்ளது. பொதுமக்களுக்கு கடந்த அக்டோபர் மாதம் திறக்கப்பட்ட கோனி தீவின் இயற்கை பூங்கா விற்கு மக்கள் தொடர்ந்து செல்லலாம். பொங்கோல் பிரோனாட் அல்லது பாசிர் ரிஸ் கோஸ்ட் தொழிலியல் பூங்கா-6 வழியே அமைக்கப்பட்ட பாலங்களின் வழியாக கோனி தீவுக்குச் செல்லலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!