நடுவராக 3 நட்சத்திர அங்கீகாரம் பெற்ற ஸ்டீவ்

வி.அருள் ஓஸ்வின்

அனைத்­து­லக குத்­துச்­சண்டைச் சங்கத்­தின் நடு­வ­ரா­கப் பணி­யாற்­றச் சான்­றி­தழ் பெற்ற முத­லா­வது மற்றும் ஒரே சிங்கப்­பூ­ரர் என்ற பெருமையை எட்­டி­யுள்­ளார், ஸ்டீவ் என்று அழைக்கப்படும் திரு அரு­ண­கி­ரி­நா­தன், 55. குத்­துச்­சண்டை, காற்­பந்தாட்­டம், ஓட்­டப்­பந்த­யம், ஹாக்கி, கபடி என்று இவர் சிறப்­பாக விளை­யா­டும் விளை­யாட்­டு­களின் பட்­டி­யலை அடுக்­கிக்­ கொண்டே போகலாம். முழு நேரச் சொத்து முக­வ­ராகப் பணி­பு­ரி­யும் இவர், குத்­துச்­சண்டை விளை­யாட்­டில் நடு­வ­ரா­கப் பல சாதனை­களைக் குவித்­துள்­ளார்.

'ஐபா' என்று அழைக்­கப்­படும் அனைத்­து­ல­கக் குத்­துச்­சண்டைச் சங்கம் ஏற்பாடு செய்த நடுவர் திறன் மேம்பாட்டு வகுப்­பு­களில் கலந்­து­கொண்ட அவ ருக்கு மூன்று நட்­சத்­திர நடு­வ­ராக, கடந்த பிப்­ர­வரி மாதத்­தில் அங்­கீ­கா­ரம் கிடைத்­தது. 1993ஆம் ஆண்டு சிங்கப்­பூ­ரில் நடந்த தென்­கிழக்­கா­சிய விளையாட்­டு­களில் குத்துச் சண்டைப் போட்­டி­யின் நேரப் பதி­வா­ள­ரா­கத் தொடங்கிய பய ணத்தை மியன்­மார், சிங்கப்­பூரில் 2013, 2015- ஆண்­டு­களில் நடை­பெற்ற தென்­கிழக்­கா­சிய விளை­ யாட்­டு­களில் நடுவராகத் தொடர்ந்தார்.

ஆஸ்­தி­ரே­லி­யா­வி­லும் சமோ­வா­வி­லும் நடைபெற்ற 'ஐபா' அனைத்­து­லக குத்துச்­சண்டை­ போட்டிகளில் நடு­வ­ராக இருந்­துள்­ளார். 2011 ஆம் ஆண்டு நடை­பெற்ற 'ஃபிஃபா' காற்­பந்­துப் போட்­டி­களி­லும் நடு­வ­ராக இருந்த சிறப்­பும் இவ­ருக்கு உண்டு.

அனைத்துலக அளவில் கொரியாவுக்கும் (இடது) ஜப்பானுக்கும் இடையிலான குத்துச்சண்டைப் போட்டியில் நடுவராக இருந்த ஸ்டீவ் (நடுவில்) போட்டியை கவனமாக உற்று நோக்குகிறார். படம்: ஸ்டீவ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!