ஹெட்லி: பால் தாக்கரேவைக் கொல்ல திட்டமிடப்பட்டது

மும்பை: பாகிஸ்தான்=அமெரிக்க பயங்கரவாதியான டேவிட் ஹெட்லி, இந்தியாவின் சிவ சேனா நிறுவனரான பால் தாக்கரேவைக் கொல்ல திட்டமிடப்பட்டி ருந்தது என்று தெரிவித்துள்ளான். தற்போது அரசாங்க ஆதரவு சாட்சியாளராக மாறிய குற்றவாளி டேவிட் ஹெட்லி நேற்று அளித்த வாக்குமூலத்தில் இந்த விவரங்களை வெளியிட்டார். அமெரிக்காவில் இருந்து காணொலிக் காட்சி மூலம் டேவிட் ஹெட்லியிடம் குறுக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

"சிவசேனா தலைவர் பால் தாக்கரேவைக் கொல்ல சதித் திட்டம் தீட்டப்பட்டதை அறிந்தேன். அவரைக் கொல்ல முயற்சி செய்து கைது செய்யப்பட்ட நபர் போலிஸ் காவலிலிருந்து தப்பினார்," என்று குறுக்-கு விசாரணையில் டேவிட் ஹெட்லி சொன்னார். வழக்குரைஞர் அப்துல் வாஹப் கானின் கேள்விகளுக்கு இரண் டாவது நாளாக டேவிட் ஹெட்லி பதில் அளித்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!