ஜப்பானை உலுக்கிய 6.7 ரிக்டர் நிலநடுக்கம்

தோக்கியோ: ஜப்பானின் ஹொக்கைடோவுக்கு அருகில் 6.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்- பட் டது என்று அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் நேற்று தெரி- வித் துள் ளது. எனினும், ‌ஷிசுனை நகருக்குத் தென் கிழக் கில் 51 கிலோ மீட்டர் தொலைவில் ஏற் பட்ட அந்த நில நடுக்கத்தை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. ஜப்பானியத் தலைநகர் தோக்கி யோவுக்கு வடக்கில் 750 கிலோ மீட்டர் தொலைவில் வடக்குக் கடற்கரையில் நேற்று சிங்கப்பூர் நேரப்படி முற்பகல் 11.25 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜப்பான் வானிலைப் பிரிவு தெரிவித்தது.

50 கிலோமீட்டர் நிலத்தடி ஆழத்தில் அந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. எந்தவித உடல், உயிர் சேதங்களும் ஏற்பட்ட செய்திகள் வெளியாகாத நிலையில் கடுமை யான அதிர்வுகள் புகைப்படக் கருவிகளில் பதிவாகின. அவை ஜப்பான் பொதுத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப் பட்டன. நிலநடுக்கம் ஏற்பட்ட இடத்தில் இருக்கும் 2 அணுஉலைகளுக்கும் எந்த விதமான ஆபத்தும் இல்லை என்று அணுஉலைப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறினர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!