பெண்களும் பங்கேற்ற புனித வெள்ளி சடங்கு

புனித வெள்­ளிக்கு முதல்­நாள் நடை­பெ­றும் சடங்­கின் அங்கமாக கிள­மெண்­டி­யில் உள்ள ஹோலி கிராஸ் தேவா­லயத்­தில் 12 பேரின் கால்­களைக் கழு­வினார் கத்­தோ­லிக்கப் பேராயர் வில்­லி­யம் கோ. பெண்­களும் இந்தச் சடங்­கில் பங்­கேற்­க­லாம் என்று போப்­பாண்ட­வர் ஃபி­ரான்­சிஸ் இவ்­வாண்டு ஜனவரி மாதத்­தில் குறிப்­பிட்­டதை அடுத்து, இந்தச் சடங்­கில் முதன் முதலாக ஆறு பெண்கள் பங்­கேற்­ற­னர். இந் ­நி­கழ்ச்­சி­யில் சுமார் 1,200 பேர் கலந்­து­கொண்ட­னர். பணிவு, சேவை ஆகி­ய­வற்றைக் குறிப்­பி­டும் இந்தச் சடங்கு, சிலுவை­யில் அறை­யப்­படு­வதற்கு முதல் நாளில் ஏசு­நா­தர் தமது சீடர்­களின் கால்­களைக் கழு­வி­ய­தன் நினை­வா­கச் செய்­யப்­படு­கிறது.

இதற்­கிடையே, "சுவர்­களை உடைத்து, பாலங்களைக் கட்­டு­வதைச் சிறப்­பா­கச் செய்வோம்," என போப்­பாண்ட­வர் கடந்த ஜனவரி மாதத்­தில் சொன்­னதைச் சுட்­டிக்­காட்டி, சம­யங் களுக்­கிடை­யான நல்­லி­ணக்­கம், புரி­த­லுக்கு போப்­பாண்ட­வர் வலுவான ஆத­ர­வா­ளர் என சட்ட, உள்­து­றை அமைச்­சர் கா.சண்­மு­கம் பாராட்­டி­யுள்­ளார்.

போப்­பாண்ட­வர் ஃபி­ரான்­சிஸ் கத்­தோ­லிக்­கர்­களுக்­குத் தலை­வ­ரா­கத் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்டு மூன்றாண்­டு­கள் நிறை­வடைந்த தைக் குறிக்­கும் விதமாக இரு வாரங்களுக்கு முன்பு விக்­டோ­ரியா ஸ்தி­ரீட்­டில் உள்ள செயின்ட் ஜோசஃப்'ஸ் தேவா­ல­யத்­தில் நடை­பெற்ற நிகழ்ச்­சி­யில் கலந்­து­கொண்ட­போது அமைச்­சர் சண்­மு­கம் இதனைக் குறிப் ­பிட்­டார்.

புனித வெள்ளியை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் சடங்கின் அங்கமாக நேற்று முன்தினம் ஹோலி கிராஸ் தேவாலயத்தில் கால்களைக் கழுவி வெண்ணிறத் துண்டினால் துடைத்தார் பேராயர் வில்லியம் கோ. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!