இந்தியா: பாகிஸ்தானில் கைதானவர் உளவாளியல்ல

புதுடெல்லி: பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டவர் இந்தியாவின் உளவாளி அல்ல என்று இந்தியா நேற்றுத் தெரிவித்தது. பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் உளவு வேலைகளில் ஈடுபட்டதாகக் கூறி இந்தியாவைச் சேர்ந்த ஒருவரை பாகிஸ்தான் அதிகாரிகள் கைது செய்தனர். அவரை, பாகிஸ்தான் அதி காரிகள் விசாரணைக்காக இஸ் லாமாபத்துக்கு அழைத்துச் சென்று உள்ளனர்.

இந்தியாவின் 'ரா' என்ற உளவுப்பிரிவுக்கு அவர் பணி ஆற்றியதாகவும் பாகிஸ்தான் குற்றம் சாட்டியிருக்கிறது. இதுதவிர, பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் கவுதம் பம்பாவாலேவை அழைத்து பாகிஸ் தான் அரசு தமது எதிர்ப்பையும் பதிவு செய்தது. உளவுத்துறை அதிகாரியாக அவர் ஊடுருவியிருப்பதாகவும் பலூசிஸ்தான், கராச்சி சீர் குலைவு நடவடிக்கைகளில் அவருக்கு தொடர்பு இருப்பது குறித்து தங்கள் எதிர்ப்பையும் கவலை யையும் பதிவு செய்திருப்பதாக பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அறிக்கை குறிப்பிட்டது.

ஆனால் இதனை மறுத்த இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப், "பாகிஸ்தான் குறிப்பிடும் தனி நபர் இந்திய கடற்படையி லிருந்து முன்கூட்டியே ஓய்வு பெற்ற -குல்பூஷன் ஜாதவ் ஆவார். அவருக்கும் இந்திய அரசுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை," என்றார். "எந்த நாட்டின் உள்விவகாரங் களிலும் இந்தியா தலையிடு வதில்லை. பாகிஸ்தானில் அமை தியும் நிலைத்தன்மையும் நிலவு வதுதான் இந்த வட்டாரத்தில் அனைவருக்கும் நல்லது என்பதை இந்தியா உறுதியாக நம்புகிறது," என்று அவர் சொன்னார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!