பட்டையைக் கிளப்பிய பட்லர்

புதுடெல்லி: இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிராக பத்து ஓட்ட வித்தியாசத்தில் கிட்டிய வெற்றி இங்கிலாந்து அணியை டி20 உலகக் கிண்ணத்தின் அரையிறு திக்கு முன்னேற்றியதுடன் தென் ஆப்பிரிக்க அணிக்கும் இறுதி மணி அடிப்பதாக அமைந்தது. அரையிறுதி வாய்ப்பு நீடிக்க வேண்டுமெனில் இங்கிலாந்து அணியைக் கட்டாயமாக வீழ்த்த வேண்டிய சூழலில் இலங்கை அணி இருந்தது. ஆனாலும், 172 என்ற கடின இலக்கை விரட்டிய அந்த அணி சந்திமால் (1), தில்ஷான் (2), சிரிவர்தனா (7), திரிமானே (3) என 15 ஓட்டங் களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இந்நிலையில் நடுவரிசை ஆட்டக்காரர்களுடன் இணைந்து அணியைத் தூக்கி நிறுத்துவதாக அமைந்தது அணித் தலைவர் ஏஞ்சலோ மேத்யூசின் ஆட்டம். இருந்தாலும், தேவைப்பட்ட ஓட்ட விகிதம் அதிகரித்தபடியே இருந்த தால் அவராலும் தமது அணியைக் கரைசேர்க்க இயலவில்லை. முன்னதாக, தொடக்க ஆட்டக் காரர் ஹேல்ஸ் ஓட்டமேதும் எடுக் காமல் ஆட்டமிழந்தபோதும் இங்கி லாந்து அணி சரிவைச் சந்திக்க வில்லை. இன்னொரு தொடக்க ஆட்டக்காரர் ஜே ஜே ராய் 42 ஓட்டங்களை விளாசினார். 4வது வீரராகக் களம்கண்ட விக்கெட் காப்பாளர் ஜோஸ் பட்லர் எட்டு பவுண்டரி, இரண்டு சிக்சருடன் 66 ஓட்டங்களை விளாசினார். இதனால் அந்த அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 171 ஓட்டங்களை எடுத்தது.

முன்னதாக, அரையிறுதி வாய்ப்பு சாத்தியப்பட இலங்கை அணியை நம்பியிருந்த தென்னாப் பிரிக்க அணி, இன்றிரவு ஒன்றுக் கும் உதவா ஆட்டத்தில் இலங்கை அணியுடன் மோதுகிறது.

37 பந்துகளில் 66 ஓட்டங்களை விளாசி ஆட்ட நாயகனாகத் திகழ்ந்த இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர். படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!