பத்தாண்டு நிறைவைக் கொண்டாடும் தமிழ்மொழி விழா

தமிழை வாழும் மொழியாகவும் மக்களிடத்தில் வாழ்வியல் சார்ந்த மொழியாகவும் நிலைபெறச் செய் யும் நோக்கில் தொடங்கப்பட்ட தமிழ்மொழி விழா இவ்வாண்டுடன் பத்தாண்டு நிறைவைக் கொண் டாடுகின்றது. 'தமிழில் பேசுவோம், தமிழை நேசிப்போம்' என்ற முழக்கவரியைக் கொண்டு ஏப்ரல் 2ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை இந்த ஆண்டு தமிழ்மொழி விழா நடைபெறுகிறது இவ்விழாவையொட்டி, மொழி, இலக்கியம் மற்றும் கலாசாரம் சார்ந்த 42 நிகழ்ச்சிகள், 40 இணை ஏற்பாட்டாளர்களால் நடத் தப்படவுள்ளன. இவ்வாண்டு, இந்திய மரபு டைமை நிலையம், தேசிய நூலக வாரியம், தேசிய புத்தக மேம் பாட்டுச் சங்கம், கல்வி அமைச்சின் தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழு, உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம் ஆகியவை குறிப்பிடத் தக்க இணை ஏற்பாட்டாளராக விளங்குகின்றன.

தமிழ்மொழியின் வளர்ச்சிக்கும் தமிழை அடுத்த தலைமுறையினர் சரிவரக் கையாளும் தன்மையின ராக விளங்குவதை ஊக்குவிக்கும் வண்ணமும் இப்போதுள்ள இணை ஏற்பாட்டாளர்களுடன் ஏழு புதிய இணை ஏற்பாட்டாளர்களும் நிகழ்ச்சிகளைப் படைப்பார்கள். கூடுதலாக, கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவின் ஒருங்கி ணைப்பில் சில பள்ளிகள் புத்தாக் கமும் சுவாரசியமும் நிறைந்த நிகழ்ச்சிகளைப் படைக்கும். சில பள்ளிகள் தொழில்நுட்பம் சார்ந்த மென்பொருள்கள், பட்டறைகள், போட்டிகள் ஆகியவற்றையும் ஏற்பாடு செய்துள்ளன.

வர்த்தக, தொழில் அமைச்சரும் (தொழில்) வளர்தமிழ் இயக்கத்தின் ஆலோசகருமான திரு ஈஸ்வரன் அடுத்த மாதம் 2ஆம் தேதி சனிக் கிழமை மாலை 6.30 மணிக்குத் விழாவைத் தொடங்கி வைப்பார். இவ்வாண்டு விழா பற்றிய விழிப்புணர்வை மக்களிடத்தில் ஏற்படுத்தும் வண்ணம் வளர்தமிழ் இயக்கத்தினரும் இணை ஏற்பாட் டாளர்களும் நேற்று லிட்டில் இந்தி யாவில் கூடி, பொதுமக்கள், வர்த் தகர்களிடையே கூடுதல் தகவல் களைப் பகிர்ந்துகொண்டனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!