நான் மட்டுமே தகுதியுள்ள முதல்வர் வேட்பாளர்

தற்போது 4 பேர் முதல்வர் வேட்பாளர் என்று மக்கள் முன் நிறுத்தப்பட்டிருக்கிறோம். நால்வரில் 3 பேர் திரையுலகம் சார்ந்தவர்கள். ஆனால் நான் மட்டுமே நிபுணத்துவம் வாய்ந்தவன், மருத்துவர் எனும் தகுதி கொண்ட வேட்பாளர். எனவே மாற்றத்தை விரும்புகிறவர்கள் என்னைத்தான் தேர்ந்தெடுப்பர். தவிர, நிர்வாகத் திறமையை நிரூபித்தவன் நான். ஐந்தாண்டு காலம் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த அனுபவம் உள்ளது. அப்போது நான் செயல்படுத்திய 108 ஆம்பு லன்ஸ் சேவை நாடு முழுவதும் வெற்றிகரமாக அமலில் உள்ளது.

நான்கு அனைத்துலக விருதுகளைப் பெற்றுள்ளேன். இந்தியாவில் வேறு எந்த மத்திய அமைச்சருக்கும் இப் பெருமை கிடைக்கவில்லை. ஐ.நா. பேரவைச் செயலர் பான் கி மூன் டெல்லி வந்தபோது எனது அலுவலகத்திற்கே நேரடி யாக வருகை தந்து என்னைப் பாராட்டினார். விஜயகாந்திடம் இப்படிப் பட்ட திறமைகள் உள்ளனவா? ஜெயலலிதாவின் நிர்வாகத் திறனுக்கு கடனில் மூழ்கி யுள்ள தமிழகமே சரியான சான்று.

என் தந்தை கோபக்காரர் அல்ல. மக்கள் நலனில் அக்கறையுள்ளதால் எளிதில் உணர்ச்சிவசப்படுகிறார். பேட்டி, படம்: சதீஷ் பார்த்திபன்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!