இளம் கவிஞர்களை ஊக்குவித்த ‘இளம்பிறை’

மா.பிரெமிக்கா

இளையர்களை, வளர்ந்துவரும் கவிஞர்களை ஊக்குவிக்கவும் அவர்களது படைப்புகளை மேடை ஏற்றவும் வாய்ப்பளித்தது தமிழ் மொழி விழாவையொட்டி நடந்த ‘இளம்பிறை’ கவிதை வாசிப்பு நிகழ்ச்சி. தேசிய நூலக வாரியத் தின் இளையர் எழுத்தாளர் வட் டத்தின் ஏற்பாட்டில் கடந்த மாதம் 20ஆம் தேதி தேசிய நூலக வாரி யத்தில் இந்நிகழ்ச்சி இடம்பெற்றது.

2018 பிப்ரவரியில் தொடங்கப் பட்ட இந்த இளையர் எழுத்தாளர் வட்டம், தமிழை நேசிக்கும் இளை யர்கள் ஒன்றிணைந்து ஆக்க பூர்வமான கவிதைகளை எழுதி தமிழ்ப் புழக்கத்தையும் சிங்கப்பூர் தமிழ்க் கவிதைத் தொகுப்புகளை யும் அதிகரிக்க முயல்கின்றது. அக்குறிக்கோளை நோக்கிய பயணத்தின் ஒரு பகுதியாக ‘இளம்பிறை’ நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இளையர் எழுத்தாளர் வட்டத்தைச் சேர்ந்த எட்டு இளையர்கள் பதின்ம வயதுப் பருவம், நட்பு, காதல், இழப்பு, பெண்ணியம் போன்ற உணர்வு களைக் கவிதைகளாகப் படைத்த னர். பின்னணியில் ஒலித்த ‘கீபோர்டு’ இசையால், கவிதை களை மேலும் அனுபவித்து மகிழ முடிந்தது.

மேலும்: epaper.tamilmurasu.com.sg

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஒரு சிறப்பு விருந்தினராக எவ்வாறு உரை நிகழ்த்துவார் என்பதை இரு இளையர்கள் தங்கள் சகாக்களின் முன்னால் படைத்துக் காட்டினர். இளையர்கள் தங்கள் உரையைத் தாங்களே ஒரு கருப்பொருளின் அடிப்படையில் எழுதியும் இருந்தனர். படம்: சிண்டா

15 Jul 2019

தலைமைத்துவத் தேடலில் இளையர்கள் 

பண்புநலன்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் கதையைக் குமாரி அபிராமி தன் தொடக்கநிலை ஒன்றாம் மாணவர்களிடம் படித்துக் காட்டுகிறார். (படம்: கல்வி அமைச்சு)

08 Jul 2019

வாழ்க்கைக்கும் வழிகாட்டும் கல்வியாளர்கள்