தாயின் புற்றுநோயைக் கண்டு தாதிமை துறையைத் தேர்ந்தெடுத்த மெரிலின்       

எஸ்.வெங்கடேஷ்வரன்

பள்ளிப் பாடங்களிலும் விளை யாட்டிலும் மூழ்கியிருக்கவேண்டிய பருவத்தில் புற்றுநோயால் பாதிக் கப்பட்ட தமது தாயாரைக் கவ னித்துக் கொள்ளும் முக்கிய பொறுப்பை திருமதி மெரிலின் பெர்ல் டேவிட், 31, ஏற்க நேரிட்டது. 
தமது ஒன்பதாவது வயதில் தமது தாயாரின் முக்கிய பராமரிப்பாளராகி அவருக்குப் பணிவிடை கள் செய்யத் தொடங்கினார் மெரி லின். 
கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் சிகிச்சைக்குப் பிறகு 2002ஆம் ஆண்டில் மெரிலினின் 14ஆவது வயதில் தாயார் காலமானார். எனினும் அப்போதே தாம் வளர்ந்த பிறகு ஒரு தாதியாகி மற்றவருக்குச் சேவை செய்ய வேண்டும் என்பதை அவர் முடிவுசெய்தார்.
“என் தாயாரின் பராமரிப்பாள ராக இருந்தபோது ஒரு நல்ல தாதிக்குத் திறன்களுடன் கருணை யும் இருக்கவேண்டும் என்பதை அறிந்தேன். நோயாலோ வசதிக் குறைபாட்டாலோ அவதியுறுவோ ருக்கு உதவி புரியவேண்டும் என் பதை எனது வாழ்க்கை லட்சியமாக் கிக் கொண்டேன்,” என்றார் மெரிலின். 

தற்போது சிங்ஹெல்த் பலதுறை மருந்தகங்களில் ஒன்றான பிடோக் பலதுறை மருந்தகத்தில் மூத்த தாதியாகப் பணிபுரிந்து வருகிறார் திருமதி மெரிலின்.  ஆஸ்துமா, நீரிழிவு நோய், ரத்த அழுத்தம் போன்ற நாட்பட்ட நோய் களால் அவதியுறுவோரைப் பராம ரிப்பதோடு, பொதுமக்களுக்குச் சுகாதாரக் கல்வி வழங்கி, அவர் தமது குழுவினருடன் மாதத்திற்கு சுமார் 16,000 நோயாளிகளுக்குச் சேவையளித்து வருகிறார்.   2008ஆம் ஆண்டில் நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரியில் பட்டயம் பெற்ற பின்பு, 2014ஆம் ஆண்டில் சிங்ஹெல்த் நிறுவனத் திலிருந்து பெற்ற கல்வி உதவி நிதியின் மூலம் அதே கல்லூரியில் உயர் பட்டயம் பெற்றார். 
அதோடு தாதியாகப் பணி புரிந்துகொண்டே பகுதி நேரமாகப் படித்துப் பிரிட்டனின் சண்டர்லாந்து பல்கலைக்கழகத்திலிருந்து 2011 ஆம் ஆண்டில் தாதிமைத் துறை யில் பட்டக்கல்வியை முடித்தார்.      
தமது 10 ஆண்டுகால தாதி மைத் துறையில் மறக்கமுடியாத பல அனுபவங்களைப் பெற்றதாகக் கூறினார் மெரிலின். 
சிறந்த தாதிமை சேவைக்காக இதுவரை இரண்டு விருதுகளைப் பெற்றுள்ளார் மெரிலின். 
சென்ற ஆண்டு சிங்ஹெல்த்  நிறுவனத்தின் உன்னத சேவை விருதும், இவ்வாண்டு மனநோய் சார்ந்த முயற்சிக்காக இரு சிறப்பு விருதையும் அவர் பெற்றார். 

மெரிலின் தாதியாக சேவை யாற்றும் வேளையில் அவரது குடும்பத்தார் சிலரும் பல்வேறு வழிகளில் நாட்டுக்குப் பங்காற்றி வருகின்றனர். 
கணவர் திரு ராஜமோகன் ரத்தினம், 36, கடந்த 16 ஆண்டு களாக காவல் துறையில் பணி புரிந்து வருகிறார். 
அவரது அக்கா திருமதி மெரி லின் பெட்ரிஷியா டேவிட், 35, சிங்கப்பூர் ஆயுதப்படையில் கடந்த 15 ஆண்டுகளாக முழு நேர சேவையாற்றுகிறார். மெரிலினின் மைத்துனர் 23 ஆண்டுகளாகச் சிங்கப்பூர்  கடற்படையில் சேவை யாற்றி வருகிறார். 
குடும்பத்தில் பல உறுப்பினர்கள் பொதுச் சேவையில் பணிபுரிவது எதேச்சையாக நிகழ்ந்தது என்றா லும் நாட்டுக்குப் பங்காற்றுவது மிகுந்த மன நிறைவைத் தருகிறது என்றார் மெரிலின். 
தமது தாயாரின் நினைவாக, அவர் இறந்த மவுண்ட் அல்வெர் னியா மருத்துவமனையில் பணிபுரி யும் ஊழியர்களுக்கும் அங்குள்ள நோயாளிகளுக்கும் ஒவ்வோர் ஆண்டும் மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி ஒன்றை மெரிலினும் அவ ரது குடும்பத்தாரும் நடத்தி வரு கின்றனர்.