ஊழியர் தங்கும் விடுதியில்​ பொங்கல் குதூகல​ம்

பொங்கல் திரு­நாளைக் கோலா­க­ல­மாக தங்கள் சொந்த கிரா­மங்களில் கொண்டாட முடி­ய­வில்லையே என்ற ஊழி­யர்­களின் ஏக்­கத்தைத் தீர்த்து வைத்தது எம்இஎஸ் நிறு­வ­னம். வெள்­ளிக்­கிழமை வேலை நாளாக இருந்த­தால் லிட்டில் இந்­தி­யா­வுக்­கும் கோயில்­களுக்­கும் செல்ல ஊழி­யர்­களுக்கு வாய்ப்­புக் கிட்­ட­வில்லை. இதனால் சிறப்புக் கொண்டாட்­டத்­துக்கு விடுதி நிர்­வா­கம் ஏற்பாடு செய்­தி­ருந்தது. சிங்கப்­பூ­ரில் வேலை செய்யும் சுமார் 150 தமிழ் பேசும் ஊழி­யர்­கள் கடுமை­யான மழையை­யும் பொருட்­படுத்­தா­மல் முதல் முறையாக ஊழி­யர்­களுக்­கான பொங்கல் கொண்டாட்­டத்­தில் உற்­சா­க­மா­கக் கலந்­து­கொண்ட­னர்.

"சித்தூர் மாவட்­டத்­தில் விவ­சா­யத் தொழில் செய்து வளர்ந்த எங்களுக்­குச் சிங்கப்­பூ­ரில் பொங்கலைக் கொண்டாட முடியாத சூழல். எதிர்­பா­ராத விதமாக இங்கு தங்கும் விடு­தி­யில் பொங்கல் கொண்டாடும் வாய்ப்பை விடுதி நிர்­வா­கம் அமைத்­துத் தந்து வீட்டில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்திக் கொடுத்ததில் கட்டுக்கடங்கா மகிழ்ச்சி," என்று தொழில்­நுட்ப வல்­லு­ந­ரான 25 வயது வி. பிரா­ப­க­ரன் கூறினார்.

"பொங்கல் தினத்­தன்று காலை­யி­லேயே குடும்பத்­தி­ன­ரு­டன் சூரியப் பொங்கல் படைத்து, மாலையில் ஊர் மக்கள் கூடக் கோவிலில் கூட்டுப் பொங்கல் வைப்போம். மறுநாள் ஊர் மக்கள் அனை­வ­ரு­டன் சேர்ந்து மாடு, ஆடு, எருது அனைத்­துக்­கும் அலங்கா­ரம் செய்து ஊர்ப் பொது இடம் ஒன்றில் வரிசை­யாகப் பொங்கல் செய்வதுடன் விலங்­கு­களுக்கு சிறப்பு உணவும் ஊட்­டு­வது வழக்­கம். மேலும், ஆண்டு முழுவதும் எங்களு­டன் பாடு­பட்ட விலங்­கு­கள் அனைத்­துக்­கும் அன்று ஓய்வு," என்று புதுக்­கோட்டை மாவட்­டத்தைச் சேர்ந்த கட்­டு­மான ஊழி­ய­ரான 34 வயது சொ. ரவி­சங்கர் தமது முந்தைய பொங்கல் அனுபவங் களைப் பகிர்ந்துகொண்டார்.

மண்பானையில் பால் பொங்கியதும் 'பொங்கலோ பொங்கல்' என்று மிகுந்த சத்தத்துடன் ஆர்ப்பரித்துக் கொண்டாடிய ஊழியர்கள். படம்: திமத்தி டேவிட்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!