SG50: நீருக்கடியில் வாழ்க்கைத் தொழில்

46. சு.தமிழ்ச்செல்வன்: 2015 சிங்கப்பூரின் பொன்விழா ஆண்டு. இந்த ஐம்பது ஆண்டு காலத்தில் நம் சாதனை அசாதாரணமானது! இதன் அடிப்படை மக்கள்! நாட்டு நிர்மாணம், கல்வி, சுகாதாரம், விளையாட்டு, கலை என அனைத்துத் துறைகளிலும் தடம் பதித்து வரும் நம் மக்களில் 50 பேரை இந்த ஆண்டு முழுவதும் இத்தொடர் சிறப்பிக்கிறது. இவர்கள் மூலமாக தமிழ் முரசு கடந்த காலத்தை, நிகழ்காலத்தை, எதிர்காலத்தை எண்ணிப் பார்க்கிறது. சுற்­று­வட்­டா­ரத் தீவுகளை சிங்கப்­பூ­ரு­டன் இணைக்­கும் பாலங்களின் தரத்தை அவ்­வப்­போது சரிபார்த்து உறு­தி­யாக வைத்­துக்­கொள்ள உத­வு­ப­வர்­களில் இவரும் ஒருவர். எண்ணெய், எரிவாயு, மின்­சா­ரம் ஆகி­ய­வற்றைத் தங்கு தடை­யின்றி நாம் பெறுவதற்கும் இவர் அயராது உழைக்­கிறார். நீரில் மூழ்கிய கப்­பல்­களைச் செப்­ப­னி­டு­வது, பல அடி ஆழத்­திற்­குள் உள்ள கம்­பி­வ­டங்கள் பழு­தா­வதைத் தவிர்ப்­பது என உயிரைப் பணயம் வைத்து ஆபத்­தான பணியைக் கடந்த 30 ஆண்­டு­க­ளாக செய்து வரு­கிறார் 55 வயது திரு தமிழ்ச்­செல்­வன் சுப்பை­யா­பிள்ளை. ஆபத்­தான வேலை இடம். சவாலான பணிகள். ஐம்பது அடி ஆழம் வரையில் பல கிலோ எடை­யுள்ள முக்­கு­ளிப்பு உடை­யு­டன் நீருக்­க­டி­யில் பணி­யாற்­று­வதை வாழ்க்கைத்­தொ­ழி­லா­கக் கொண்­டுள்­ளார் சிங்கப்­பூ­ரின் மூத்த முக்­கு­ளிப்­பா­ளர்­ களில் ஒரு­வ­ரான திரு தமிழ்ச்­செல்­வன். நீருக்­க­டி­யி­லுள்ள கம்­பி­வ­டங்களைப் பழுது பார்த்­தல், பாலங்களின் தூண்­களைச் சோதித்­தல் போன்றவை திரு தமிழ்ச்­செல்­வ­னின் பணி­களில் சில. சிங்கப்­பூரை­யும் ஜோகூரை­யும் இணைக்­கும் இரண்டாம் இணைப்­புப் பாலம், செந்தோசா தீவுப் பாலம், ஜூரோங் தீவுப் பாலம் ஆகி­ய­வற்­றின் தூண்களை நீருக்கு அடியில் உரு­வாக்­கு­வதற்­காக பணியில் ஈடு­பட்­டி­ருந்த திரு தமிழ்ச்­செல்­வன், முக்­கு­ளிப்­பதை முறைப்­படி கற்­றுக்­ கொள்­ளா­த­வர். முக்­கு­ளிப்­பா­ளர்­களுக்­கான தேவை சிங்கப்­பூ­ரில் அப்போது அதிகம் என்றும் முக்­கு­ளிப்­பா­ள­ராக நீச்சல் தெரிந்­தி­ருந் தால் போதும் என்றும் கூறிய அவர், "முக்­கு­ளிப்­பா­ள­ரா­வதற்கு கல்வி கற்­றி­ருக்­க­வேண்­டும் என அவ­சி­யம் அன்று கிடையாது," என்றார். உயர்­நிலை இரண்டு வரை படித்­தி­ருந்த திரு தமிழ்ச்­செல்­வன், நண்­ப­ரின் மூலம் கிடைத்த வாய்ப்பைப் பயன்­படுத்தி வாழ்க்கை­யில் இன்று நல்ல நிலைக்கு முன்­னே­றி­யுள்­ள­தா­கக் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!