அரசின் திருத்தத்தை எதிர்த்து வடமாநிலங்களில் போராட்டம்

போபால்: எஸ்சி, எஸ்டி வன் கொடுமை தடுப்புச் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து வட மாநிலங்களில் போராட்டம் வெடித்தது. மத்தியப் பிரதேசம், பீகார், உத் தரப் பிரதேசத்தில் இந்த போராட் டத்தின் காரணமாக கலகம் வெடித்ததாகவும் ராஜஸ்தான், ஜார்கண்ட், மஹாராஷ்டிராவிலும் இந்த பந்த் தொடர்வதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போராட்டத்தின்போது ரயில் கள் மறிக்கப்பட்டன. பல மாவட் டங்களில் கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டன. இதனால் மக்க ளின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

பீகார், மத்தியப்பிரதேசத்தில் பாதுகாப்புப் படையினர் விழிப்பு நிலையில் உள்ளனர். முன்னெச் சரிக்கை நடவடிக்கையாக மத்தி யப்பிரதேசத்தின் அனைத்து மாவட்டங்களிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி சட்டத்தில் திருத் தம் செய்ததை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் மீண்டும் சட்ட மசோதாவில் திருத்தம் கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கை களை முன்வைத்தும் நேற்று நாடு தழுவிய போராட்டத்துக்கு (பாரத் பந்த்) அழைப்பு விடுக்கப்பட்டது.

பீகாரின் பாட்னாவில் உள்ள ராஜேந்திர நகர் ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டம் நடத்தியவர்கள் கைதாகினர். படம்: ஊடகம்