தொழில்நுட்பத் தமிழுக்கு பயிற்சி பெறும் ஆசிரியர்கள்

இன்றைய பன்மொழி பயன்பாட்டுச் சூழலில் தமிழ் மொழியை எவ்வாறு தக்கவைத்துப் பயன்படுத்துவது என்பது உலகத் தமிழாசிரியர் மாநாட்டின் முக்கிய கருப்பொருள். அதற்கேற்ப நேற்று நடைபெற்ற மாநாட்டில் பொது அமர்வு ஒன்றும் பல தலைப்புகளை ஒட்டிய இணை அமர்வுகளும் இடம்பெற்றன. “உலகத்தின் செம்மொழிகளில் ஒன்றான தமிழ் மொழி, இன்று உலகம் முழுவதுமே கற்கப்பட்டு, கற்பிக்கப்பட்டு வருகிறது. இது தமிழர்களுக்குக் கிடைத்த ஓர் அரிய வாய்ப்பு,” என்றார் மாநாட்டின் முதல் பொது அமர்வில் பேசிய தலைவர் டாக்டர் மனோன்மணி சண்முகதாஸ். பொது அமர்வில் பேசிய ஆசிரியர்களில் ஒருவர் சிங்கப்பூர் தேசிய கல்விக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஆ.ரா.சிவகுமாரன்.

தமிழ் மொழியைக் கற்பிப்பத்தில் உள்ள சவால்களையும் தீர்வுகளையும் பற்றி அவர் ஆராய்ந்தார். “தமிழ் உலகமயமாகும் வேளையில் தமிழ்க் கற்பித்தலை யொட்டிய எண்ணங்கள் ஆசிரியர் களுக்கிடையிலும் நாடுகளுக் கிடையேயும் மாறுபட்டு வருகின்றன. இவற்றால் உலகளவில் தமிழ்ப் பயன்பாட்டிற்கான மென்பொரு ளையோ கணினி தொடர்புடைய சாதனங்களையோ தயாரிப்பதில் சிக்கல்கள் ஏற்படுகின்றன,” என்றார் டாக்டர் சிவகுமாரன்.

உலகத் தமிழாசிரியர் மாநாட்டில் வாசிப்பு தொடர்பான நடவடிக்கையில் ஈடுபட்ட தமிழாசிரியர்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்