ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்

ஈரோடு: இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப் பெண்ணான கலானி என்பவர் ஈரோடு அரசு மருத்துவமனையில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார். கருவுற்ற சமயத்தில் மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டபோது அவரது வயிற்றில் 3 குழந்தைகள் வளர்ந்து வருவதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் அவருக்குப் பிரசவமானது. முதல் குழந்தையைச் சுகப்பிரசவத்தில் பெற்றெடுத்த நிலையில் அறுவைச்சிகிச்சை மூலம் மற்ற இரு குழந்தைகளை வெளியே எடுக்க மருத்துவர்கள் முடிவு செய்தனர். அறுவை சிகிச்சையின் போதே நான்காவது குழந்தை இருப்பது தெரியவந்தது. தற்போது தாயும் நான்கு குழந்தைகளும் நலமாக உள்ளனர்.