'சில்வர்கோவ்' என்ற மூத்தோருக்கான நல்வாழ்வு நிலையத்தை என்டியுசி ஹெல்த் அதிகாரபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நிலையம் நேற்றுக் காலை மார்சிலிங் ரோட்டில் உள்ள 180A, 180B புளோக்குகளில் அறிமுகப் படுத்தப்பட்டது. மூத்தோருக்கான உடற்பயிற்சி நிலையத்தைக் கொண்டுள்ள இந்த நிலையம் சுகாதார, பல் பரிசோதனைக்கான சேவைகளையும் வழங்குகிறது. மேலும் கூட்டு உடற்பயிற்சி, சமையல் வகுப்புகள் உள்ளிட்டவற்றையும் இந்த நிலை யம் வழங்குகிறது.
180A, 180B புளோக்குகளில் உள்ள மூத்த குடிமக்கள் ஆண்டுதோறும் 10 வெள்ளி செலுத்தி இந்த நிலையங்களுக்கு அடிக் கடி செல்லலாம். இந்த புளோக்கு களைத் தவிர மற்ற புளோக்குகளில் வசிக்கும் மூத்த குடிமக்கள் உறுப்பினராகச் சேர ஆண்டுக் கட்டணமாக 300 வெள்ளி செலுத்த வேண்டும்.