சட்டவிரோதக் குடியேறிகளுக்கு எதிராக புதிய விதிமுறை

வா‌ஷிங்டன்: அமெரிக்காவின் தெற்கு எல்லையோரம் அமெரிக் காவுக்குள் நுழையும் சட்ட விரோதக் குடியேறிகள் இனி புதிய விதிமுறையின் கீழ் அகதி களாகக் கருதப்படமாட்டார்கள் என்று டிரம்ப் நிர்வாகம் அறிவித் துள்ளது. இந்த விதிமுறையின் கீழ் அதிபரின் கட்டுப்பாடுகளை மீறி நுழைபவர்கள் அகதிகளாக ஏற்றுக் கொள்ளப்பட மாட்டார்கள் என்று அது மேலும் விளக்கம் அளித்துள்ளது. நாட்டு நலன்களை கருத்தில் கொண்டு குடியேறிகளை அதிபர் மறுக்க முடியும் என்றும் டிரம்ப் நிர்வாகத்தின் அறிக்கை குறிப் பிட்டது. ஆனால் இந்த நடவ டிக்கை சட்டவிரோதமானது என்ற குறை கூறல்கள் எழுந்து உள்ளன.

அண்மைய தேர்தல் கூட்டங் களில் குடியேறிகளின் பிரச்சினை களை முன் வைத்து அதிபர் டிரம்ப் பிரசாரத்தில் ஈடுபட்டார். ஆனால் அது அவருக்கு சாதமாக அமையவில்லை. மத்திய அமெரிக்காவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான குடி யேறிகள் மெக்சிகோ வழியாக அமெரிக்காவுக்குள் நுழைய முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் எல்லையில் துருப்பு களை நிறுத்தியுள்ள அதிபர் டிரம்ப் அவர்களை தடுத்து வரு கிறார். குடியேறிகளை 'ஊடுருவல் காரர்கள்' என்றும் அவர் வரு ணித்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!