நடிகை அனிஷாவை திருமணம் செய்துகொள்ளப் போவதாக அறிவித்துள்ளார் நடிகர் விஷால். இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் அவர் பதிவிட்டுள்ளார். 'அர்ஜுன் ரெட்டி' படத்தில் சிறு வேடத்தில் நடித்தவர் அனிஷா. இவரை காதலிப்பதாக வெளிவந்த தகவல்கள் தொடர்பில் எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் மௌனம் காத்து வந்தார் விஷால். இந்நிலையில், முதல் முறை யாக தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் தனது திருமணத்தை உறுதி செய்துள்ளார். "ஆம்.. மகிழ்ச்சி... மிக்க மகிழ்ச்சி... பெண்ணின் பெயர் அனிஷா. அவர் சரியென்று சொல்லிவிட்டார். எங்களது திருமணம் முடிவாகிவிட்டது. என்னுடைய வாழ்வில் மிகப் பெரிய திருப்புமுனை இதுதான்.
விரைவில் திருமணத் தேதியை அறிவிப்போம்," என்று தெரிவித் துள்ளார் விஷால். தங்களது திருமணம் குறித்து அனிஷாவும் தமது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "ஒரு புதிய விஷயத்தின் தொடக்கம்," என்று அவர் திருமணம் குறித்து குறிப்பிட்டுள்ளார். "அனைவருக்கும் நன்றி. எனது வளர்ச்சி, எனது கற்றல், எனது அவதானிப்புகள், எனது உந்து சக்தி, எனது உண்மை, எனது வலி, எனது வலிமை என அனைத்திலும் பங்கெடுத்து நான் இன்று இந்த நிலைமையில் இருக்கக் கார ணமாக இருக்கிறீர்கள். விரை வில் நான் புதிய பயணத்தை தொடங்குவேன். "எனது கனவு, லட்சியங்கள், சவால்கள் என அனைத்தையும் சாதிக்க முயற்சிப்பேன். வாழ்க்கையென்னும் பாதையில் சேர்ந்து பயணிக்க ஒருவரைக் கண்டுபிடித்துவிட்டேன். "அந்த மனிதர் தோள் கொடுக்கும் விஷயங்களுக்காக, அவரது நல்ல மனதிற்காக நான் அவரை அண்ணாந்து பார்க்கிறேன்," என அனிஷா தமது பதிவில் மேலும் குறிப் பிட்டுள்ளார்.