கோலாலம்பூர்: கிழக்கு கடற்கரை ரயில் பாதை தொடர்பாக சீன நிறுவனத்துடன் செய்யப்பட்டிருந்த ஒப்பந்தத்தை மலேசியா ரத்து செய்துள்ளது. அதனைத் தொடர்ந்து, புதிய ஒப்பந்தக்காரரை மலேசியா தேடி வருகிறது.
ரயில் பாதையை கட்ட தோராயமாக 81 பில்லியன் ரிங்கிட் செலவாகும் என்று கணிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்தத் தொகையை 40 பில்லியன் ரிங்கிட்டுக்கு மலேசியா குறைத்துள்ளது. மலேசிய தீபகற்பத்தின் கிழக்கு கடற்கரையையும் மேற்கு கடற்கரையையும் இணைக்கும் அந்த 688 கிலோ மீட்டர் தூர ரயில் பாதைக்கான கட்டுமானப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
கடந்த மே மாதத்தில் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணிக் கட்சிகள் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று அரசாங்கத்தை அமைத்தன.
அதனைத் தொடர்ந்து, தேசிய முன்னணி அரசாங்கம் செய்திருந்த ஒப்பந்தங்களை அது மறுஆய்வு செய்து வருகிறது.
ரயில் பாதையைக் கட்டுவதற்கான தொகையைக் குறைத்துக்கொள்ள ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த சீன நிறுவனத்திடம் மலேசியா கோரிக்கை விடுத்திருந்ததாகக் கூறப்படுகிறது. மலேசியாவின் கோரிக்கையை அந்த நிறுவனம் ஏற்க மறுத்ததை அடுத்து ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ரயில் பாதைஒப்பந்தம்: ரத்து செய்த மலேசியா
23 Jan 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 23 Jan 2019 08:59
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Mohamed Javed Indian Muslim Food: 473 Fernvale St, Singapore 790473
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
சிங்கப்பூர் ஆகாயப்படை அருங்காட்சியகத்தில் குதூகலத் தமிழ் கற்றல்.
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!