அண்மைக் காலமாகக் காவல் துறையின் சேவையைப் பாராட்டும் வகையில் எடுக்கப்படும் படங் களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
அந்தப் பட்டியலில் இணைந்தி ருக்கும் புதிய படம் 'காவல்துறை உங்கள் நண்பன்'. இதை ஆர்பிஎம் இயக்குகிறார்.
பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் சுரேஷ் ரவி நாயகனாகவும், பின்னணிக் குரல் கலைஞர் ரவீணாவும் ஜோடி யாக நடிக்கின்றனர்.
சுரேஷ் ரவி இதற்கு முன்பு 'மோ' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமா னார். ரவீணாவுக்கும் 'கிடாயின் கருணை மனு' படத்தில் நடித்த அனுபவம் உள்ளது.
இன்றைய நவீன யுகத்தில் நாம் உண்ணும் உணவைக் கூட தபால் சேவை போல் ஒருவர் நேரில் கொண்டு வந்து ஒப்ப டைப்பது வழக்கமாகி விட்டது.
அத்தகைய பொருட்களை ஒப் படைக்கும் பணியாளர்களுக்கும் காவல்துறைக்கும் இடையேயான உறவு குறித்து அலசுகிறதாம் இப்படம்.
அனைத்துக் காட்சிகளுமே எதார்த்த நிலையை மீறாத, மறைக்காத வகையில் இருக்கும் என்கிறார் இயக்குநர் ஆர்பிஎம். இப்படத்துக்கு ஆதித்யா, சூர்யா இரட்டை இசையமைப்பாளர்கள் இசையமைத்துள்ளனர்.
'ராணி தேனி' என்று தொடங்கும் பாடலை ஹரிசரண் பாடியுள்ளார். இந்தப் பாடல் இளையர்களைக் கவரும் வகையில் இருக்குமாம்.
தற்போது இப்படத்தின் படப் பிடிப்பு மிக வேகமாக நடைபெற்று வருகிறது.
காவல்துறை உங்கள் நண்பன்
27 Jan 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 27 Jan 2019 09:06
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!