திரைப்பட உதவி இயக்குநரான எஸ்.ஆர்.பாலகிருஷ்ணன் மனைவி சந்தியாவைக் கொன்ற குற்றச் சாட்டின் பேரில் கைது செய்யப் பட்டுள்ளார்.
சென்னை அருகே பெருங்குடியில் உள்ள குப்பைக் கிடங்கில் ஜனவரி 20ஆம் தேதி பெண்ணின் கை, கால்கள் பார்சல் செய்யப்பட்டுக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, போலிசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
கொட்டப்பட்ட குப்பை கோடம் பாக்கம் பவர் ஹவுஸ் பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்டது என்பதை அறிந்தனர்.
கோடம்பாக்கம் பகுதியில் காணாமல்போன பெண்களைப் பற்றிய விவரங்களைச் சேகரித்த தில் அப்பகுதியில் சந்தியா என்ற பெண் காணாமல் போயிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவரைப் பற்றிய தகவல்கள் திரட்டப்பட்டு, கொலையுண்ட பெண் தூத்துக் குடியைச் சேர்ந்த சந்தியா என்பது உறுதியானது.
அதைத் தொடர்ந்து அவரது கணவர் பாலகிருஷ்ணனை போலிசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
விசாரணையில் மனைவி சந்தியாவைக் கொன்றதை பால கிருஷ்ணன் ஒப்புக்கொண்டார். சந்தியா பொங்கலுக்கு சென்னை வந்தபோது மீண்டும் குடும்பப் பிரச்சினை குறித்து வாக்குவாதம் ஏற்பட்டதில் கடந்த 20ஆம் தேதி இரவு மனைவியை அவர் கொலை செய்துள்ளார்.
பின்னர் உடலை இயந்திரத்தால் துண்டு துண்டாக வெட்டி கை, கால்களை குப்பை மேட்டில் வீசியுள்ளார்.
பாலகிருஷ்ணன் அடையாளம் காட்டியதன் அடிப்படையில் ஈக்காடுதாங்கல் பாலத்தின் கீழ் அடையாறு ஆற்றின் கரையோரம் சந்தியாவின் இடுப்பு முதல் முழங்கால் வரையிலான பகுதிகள் கண்டெடுக்கப்பட்டன.
ஆனால், இதுவரை சந்தியா வின் தலை உட்பட உடலின் மற்ற பாகங்கள் கிடைக்கவில்லை. தேடும் பணியில் போலிசார் தீவிர மாக ஈடுபட்டுள்ளனர்.
மனைவியைக் கொன்று கை, கால்களை வெட்டி குப்பையில் வீசிய இயக்குநர்
7 Feb 2019 00:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 7 Feb 2019 00:09
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
எவரெஸ்ட் மலையடிவார முகாமைச் சென்றடைந்த ஆக இளைய சிங்கப்பூரரான 5 வயது சிறுவன்.
மே 2, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!