சிட்னி: பத்து அணிகள் பங்கேற்கும் 12வது உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி வரும் மே மாதம் 30ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இந்தப் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியை வலுப்படுத்தும் விதமாக அந்த அணியின் உதவி பயிற்றுவிப்பாளராக ரிக்கி பாண்டிங் நியமிக்கப்பட்டு இருக்கிறார். ரிக்கி பாண்டிங் தலைமையில் ஆஸ்திரேலிய அணி 2003 மற்றும் 2007ஆம் ஆண்டுகளில் உலக கிண்ணத்தை வென்று இருந்தது.
"கடந்த முறை நாங்கள் உலகக் கிண்ணத்தை வென்றோம். இந்த முறையும் எங்களால் உலகக் கிண்ணத்தை நிச்சயம் தக்கவைத்துக்கொள்ள முடியும் என்று நம்புகிறேன். தற்சமயம் உலகக் கிண்ணத்தை வெல்லும் வாய்ப்பில் இந்தியாவும், இங்கிலாந்தும் முன்னணியில் இருக்கின்றன. ஆனால் ஸ்டீவன் ஸ்மித்தும் டேவிட் வார்னரும் குழுவுக்குத் திரும்பியதும் எங்கள் அணியும் பலம் வாய்ந்ததாக உருவெடுத்துவிடும். ஸ்மித்தும் வார்னரும் உலகத்தரம் வாய்ந்த பந்தடிப்பாளர்கள், அனுபவசாலிகள். நெருக்கடியான சூழலைத் திறம்படக் கையாளக்கூடியவர்கள். உலகக் கிண்ணப் போட்டி நடைபெறும் இங்கிலாந்தில் உள்ள வானிலை எங்களது ஆட்ட பாணிக்குச் சாதகமானது. அதனால் உலகக் கிண்ணத்தை வெல்ல வாய்ப்புள்ள பிரதான அணிகளில் ஒன்றாக ஆஸ்திரேலியாவும் இருக்கும்," என்று ரிக்கி பாண்டிங் தெரிவித்தார்.
பாண்டிங்: ஆஸ்திரேலியா மீண்டும் உலகக் கிண்ணத்தை ஏந்தும்
12 Feb 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 12 Feb 2019 08:31
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
எவரெஸ்ட் மலையடிவார முகாமைச் சென்றடைந்த ஆக இளைய சிங்கப்பூரரான 5 வயது சிறுவன்.
மே 2, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!